twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாபவன் மணி உயிரோடு இருக்கையில் தள்ளி வைத்துவிட்டு இப்போ இரங்கலா?: சீறும் இயக்குனர்

    By Siva
    |

    திருவனந்தபுரம்: கலாபவன் மணி உயிரோடு இருக்கையில் அவரை ஒதுக்கி வைத்தவர்கள் எல்லாம் இரங்கல் கூட்டம் நடத்த வந்துவிட்டனர் என்று மலையாள பட இயக்குனர் வினயன் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடியில் நடிகர் கலாபவன் மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. மணியின் சொந்த ஊரான சாலக்குடியில் உள்ள கார்மெல் ஹெச்.எஸ். ஸ்டேடியத்தில் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட ஏராளமான மல்லுவுட் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசினர்.

    வினயன்

    வினயன்

    கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் எடுத்த இயக்குனர் வினயன் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. அவர் ஏன் கூட்டத்திற்கு வரவில்லை என்று கலைஞர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் கேள்வி எழுப்பினர்.

    பொய்

    பொய்

    கூட்டத்திற்கு வராதது குறித்து வினயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மலையாளத்தில் விரிவாக தெரிவித்துள்ளார். அது பொய்யாக நடந்த கூட்டம். அதனால் தான் நான் அதில் கலந்து கொள்ளவில்லை என்கிறார் வினயன்.

    மதிக்காதவர்கள்

    மதிக்காதவர்கள்

    கலாபவன் மணி உயிரோடு இருக்கையில் அவரை மதிக்காதவர்கள், அவரை தள்ளி வைத்தவர்கள் எல்லாம் தற்போது மணியை என் நண்பர், சகோதரர் என்று கூறுவது நல்ல நடிப்பு ஆகும். எனக்கு அது போன்ற போலியான கூட்டத்தில் கலந்து கொள்ள பிடிக்காது என்று வினயன் தெரிவித்துள்ளார்.

    மனதில்

    மனதில்

    மணியின் நினைவு என் மனதில் உள்ளது. அவர் என்னுடைய 13 படங்களில் நடித்துள்ள நினைவு உள்ளது. அவர் நடிக்க வரும் முன்பு மூட்டை தூக்கியுள்ளார், ஆட்டோ ஓட்டியுள்ளார் என்கிறார் வினயன்.

    எளிமை

    எளிமை

    நடிகர் ஆன பிறகும் மணி தனது கடந்த காலத்தை மறக்காமல் இருந்தார். சாலக்குடி மக்களுக்கு ஓடியோடி உதவி செய்தார். மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்தவர் மணி என்று வினயன் கூறியுள்ளார்.

    English summary
    Mollywood director Vinayan said that people who didn't care about Kalabhavan Mani when he was alive are the one who address him as friend and brother.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X