Director Vishnu Vardhan: நேசிப்பாயா.. அடுத்தப்பட டைட்டிலை அறிவித்த இயக்குநர் விஷ்ணுவர்தன்!
சென்னை: இயக்குனர் விஷ்ணுவரதன் அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை மாஸாக கொடுத்து அவரது கேரியர் பெஸ்ட்டாக மாற்றினார். இந்த படங்கள் விஷ்ணுவர்தனுக்கும் மிகப்பெரிய கவனத்தை பெற்று தந்த நிலையில் பாலிவுட்டில் ஷேர்ஷா படத்தை இயக்கி தன்னுடைய மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்தப்படம் இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் கூட்டணியில் காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஷ்ணுவர்தன், அதிதி சங்கர் உள்ளிட்ட பட குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர், இதற்கான டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் விஷ்ணுவர்தன்: இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்தவர். தமிழில் குறும்பு படம் மூலம் என்ட்ரியான இவர் குழந்தை நட்சத்திரமாகவே அஞ்சலி, சத்ரியன், இருவர் என மணிரத்னம் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துவந்த விஷ்ணுவர்தன் தமிழில் கடைசியாக தன்னுடைய இயக்கத்தில் யட்சன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து பாலிவுட்டில் ஷேர்ஷா என்ற படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஹீரோவான முரளியின் இளையமகன்: இந்நிலையில் அடுத்ததாக இவர் முரளியின் இளைய மகனும் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துள்ள நிலையில் தற்போது விஷ்ணுவரதன் இந்த படத்தின் டைட்டிலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு நேசிப்பாயா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமும் மற்றும் அதிதி சங்கரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
அஜித் படங்களில் மாஸ்: அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் மூலம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தார் விஷ்ணு வர்தன். இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டில் பாலிவுட்டில் ஷேர்ஷா படம் வெளியானது. இந்தப்படமும் இவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டில் சல்மான் கானின் நடிப்பில் தி புல் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சல்மான் கானிற்கு ஜோடியாக திரிஷா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது.
நேசிப்பாயா டைட்டில்: இந்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்ததாக சல்மான் கான், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அவர் அட்லியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் விஷ்ணுவர்தனுடன் சல்மான் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகாஷ் முரளி -அதிதி ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள நேசிப்பாயா படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











