Vishnu Vardhan: அஜித் அவரோட இயக்குநர்களுக்கு கொடுக்கற பிரஷர்.. பில்லா பட இயக்குநர் பகிர்ந்த சீக்ரெட்!
சென்னை: இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்தவர். கடந்த 2003ம் ஆண்டில் குறும்பு என்ற தெலுங்குப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் அடுத்தடுத்து அஜித்குமாரின் படங்களை இயக்கி மாஸ் காட்டினார். பில்லா, ஆரம்பம் படங்கள் அஜித்தின் சினிமா கேரியரில் பெஸ்ட் படங்களாக அமைந்தவை.
பில்லா படம் அஜித்திற்கு மட்டுமில்லாமல் விஷ்ணுவர்தனுக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து ஆரம்பம் படத்தையும் மாஸாக கொடுத்தார், இதையடுத்து பாலிவுட்டில் ஷெர்ஷா என்ற படத்தை கரண் ஜோஹர் தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் இயக்கி அங்கும் முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இயக்குநர் விஷ்ணுவர்தன்: நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடந்த 2003ம் ஆண்டில் குறும்பு என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், அடுத்தடுத்த படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அஜித்தின் பில்லா படத்தை இயக்கும் வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைத்த நிலையில் அதை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அதுவரை தெருவில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த தனக்கு ஸ்டேடியத்தில் ஆடும் வாய்ப்பு போன்றது பில்லா படம் என்று தன்னுடைய பேட்டியொன்றில் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
அஜித் கொடுத்த பிரஷர்: பில்லா படம் அஜித்தின் கேரியர் பெஸ்டாக அமைந்தது, அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக இந்தப் படத்தில் காட்டியிருந்தார் விஷ்ணுவர்தன். முன்னதாக பில்லா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ் காட்டியிருந்த நிலையில், தனக்கு மிகப்பெரிய பிரஷர் வந்ததாகவும் கூட இருந்தவர்கள் அனைவரும் வளர்ந்துவரும் நிலையில் இதுபோன்ற ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய இயக்குநர்கள்மீது அதிகமான நம்பிக்கையை அஜித் வைப்பார் என்றும் இந்தப் படத்தை இயக்க அவர்தான் தனக்கு நம்பிக்கையை கொடுத்தார் என்றும் அவர் இவ்வாறு தனது இயக்குநர்கள்மீது வைக்கும் நம்பிக்கையே படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற பிரஷரை கொடுக்கும் என்றும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்: ஆயினும் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான் என பலரும் நடித்துள்ள டான்கேரக்டர்களை தள்ளி வைத்துவிட்டு தனக்கேயுரிய ஸ்டைலில் பில்லா படத்தை இயக்கியதாகவும் படம் உருவாகி ட்ரெயிலர் வரும்வரை யாருக்கும் நம்பிக்கை இல்லை என்றும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். படம் மிகச்சிறந்த படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கிய விஷ்ணுவரதன், அடுத்ததாக அஜித்தின் ஆரம்பம் படத்தையும் சிறப்பாக கொடுத்திருந்தார். ஆரம்பம் படத்தை இயக்கும் போது பில்லா படத்தை திரும்பி ரிப்பீட் செய்யக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும் அதையே அஜித்தும் தன்னுடைய ஸ்டைலில் தனக்கு கூறியதாகவும் தற்போது பேட்டியில் விஷ்ணுவரதன் தெரிவித்துள்ளார்.
நேசிப்பாயா படம்: தொடர்ந்து பாலிவுட்டிலும் மாஸ் காட்டினார் விஷ்ணுவர்தன். இவரது இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வெற்றியையும் வசூலையும் குவித்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது நேசிப்பாயா படத்தை இயக்கி முடித்துள்ளார் விஷ்ணுவர்தன். மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை விஷ்ணுவரதன் கொடுத்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் விஷ்ணுவரதன் கேரியர் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











