Vishnuvardhan: ஆயிரத்தில் ஒருவன் டைப்பில் அஜித்திற்கு கதை சொன்ன விஷ்ணுவர்தன்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன். இந்த கூட்டணி மிகப்பெரிய ஹிட் அடித்தது. பில்லா, ஆரம்பம் படங்கள் அஜித் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் எப்போதுமே இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே முன்னதாக அஜித்திற்கு வரலாற்று பின்னணியில் ராஜா மற்றும் போர்களை மையமாக கொண்டு தான் ஒரு கதையை கூறியதாகவும் அந்த படத்தை ஆயிரத்தில் ஒருவன் படம் போல எடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் விஷ்ணுவர்தன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்துடன் இணைந்து பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இந்தப் படங்களில் அஜித் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காணப்பட்டார். அஜித் கேரியர் பெஸ்ட் படங்களாக இந்த படங்கள் உள்ளன. தற்போதும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய அஜித் படங்களில் இந்த படங்கள் முதலிடத்தில் உள்ளன. இந்நிலையில் மீண்டும் விஷ்ணுவர்தன் -அஜித் கூட்டணி இணையவுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டணி இணைய வேண்டும் என்று ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வரலாற்று பின்னணியில் அஜித்திற்கு கதை: இந்நிலையில் முன்னதாக அஜித்திற்கு ஒரு கதை கூறியதாகவும் வரலாற்று பின்னணியில் ராஜா மற்றும் போரை மையமாக கொண்டு இந்தக்கதையை அஜித்திற்கு விளக்கியதாகவும் விஷ்ணுவர்தன் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். இந்த படத்தை ஆயிரத்தில் ஒருவன் படம் போன்ற கதைகளத்தில் உருவாக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் சில பல காரணங்களால் இந்த படத்தில் அஜித் இணைய முடியாமல் போனதாகவும் அவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இதுபோன்ற வரலாற்று பின்னணியிலான கதைகளில் அஜித் இணைந்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது குறித்து மாற்று கருத்துக்கள் காணப்படுகிறது.
சல்மானுடன் இணையும் விஷ்ணுவர்தன்: அஜித்தை ஸ்டைலிஷ்ஷான லுக்கில் பார்க்க ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் வரலாற்று பின்னணியில் அஜித்தை அவர்கள் ஏற்பார்களா என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில் இந்தப் படம் பேச்சுவார்த்தையிலேயே முடிவுற்றதாக தெரிகிறது. அடுத்ததாக சல்மான் கான் த்ரிஷா லீட் கேரக்டர்களின் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் விஷ்ணுவர்தன். இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வரும் மே மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கரண் ஜோகர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: இந்நிலையில் விஷ்ணுவர்தனின் சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து அவர் பேசியுள்ளார். அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் காம்பினேஷன் எப்போதுமே மாஸ்தான். இவர்களின் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வரும் அஜித், அடுத்த படங்களில் விஷ்ணுவர்தனுடன் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications