பில்லா படம் குறித்து பேச்சு.. வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட இயக்குநர்.. கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்

சென்னை: நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நேசிப்பாயா படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவரது இயக்கத்தில் முன்னதாக அஜித்தின் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. பாலிவுட்டிலும் படங்களை இயக்கி வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரது இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள நேசிப்பாயா படம் நாளைய தினம் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது. இதையொட்டி விஷ்ணுவர்தன், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

rajinikanth billa movie vishnu vardhan


இயக்குநர் விஷ்ணுவர்தன்: நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நேசிப்பாயா படத்தினை இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் விஷ்ணு வர்தன். அவரது நடிப்பில் முன்னதாக அஜித்தின் பில்லா, ஆரம்பம் படங்கள் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அஜித்தின் கேரியர் பெஸ்ட் படங்களான இவை வசூலிலும் சிறப்பாக அமைந்தன. அடுத்ததாக அஜித்துடன் விஷ்ணு வர்தன் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தை மீண்டும் ஸ்டைலிஷ்ஷாக பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட்டிலும் படங்களை கொடுத்துள்ள விஷ்ணு வர்தன் தற்போது தமிழில் நேசிப்பாயா படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நேசிப்பாயா படம்: இந்தப் படம் நாளைய தினம் பொங்கல் கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பேட்டிகளை விஷ்ணுவர்தன், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக விஷ்ணு வர்தன் அதிகமான யூடியூப் பேட்டிகளை கொடுத்து வருகிறார். தன்னுடைய பில்லா உள்ளிட்ட முந்தைய படங்கள் குறித்தும் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

விஷ்ணுவர்தனின் பில்லா பட கமெண்ட்: அந்த வகையில் தன்னிடம் பில்லா படத்தை ரீமேக் செய்யும்படி கூறப்பட்ட நிலையில், இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் சரியாக ஓடவில்லை, இந்தப் படத்தையா நாம் ரீமேக் செய்யப் போகிறோம் என்று தோன்றியது, ஆனால் அந்த காலகட்டத்திலேயே இந்தப் படத்தில் டார்க்கான கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது தன்னை ஈர்த்ததாகவும் அதனால்தான் இந்தப் படத்தை ரீமேக் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து விஷ்ணு வர்தனின் இந்த கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ரஜினியின் இந்தப் படம் வெற்றிப்படம்தான் என்பதற்கான அடுத்தடுத்த ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு: இதை மேலும் நிரூபிக்கும் வகையில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். கடந்த 1980ம் ஆண்டில் வெளியான பில்லா படம் சில்வர் ஜுப்ளி ஹிட் என்பதை விஷ்ணுவர்தன் பார்வைக்கு கொண்டுவர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடம் இதை விஷ்ணுவர்தன் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களை கொடுத்ததற்காக விஷ்ணுவர்தனுக்கு தன்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X