டோலிவுட்டுக்கு படையெடுக்கும் தமிழ் இயக்குநர்கள்.. தெலுங்குக்கு போகும் மேலும் ஒரு தமிழ் இயக்குநர்!

சென்னை: பிரபல அஜித் பட இயக்குநர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தனது முதல் படம் விஷ்ணு வர்தனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

ஆனால் தனது இரண்டாவது படத்தில் சொல்லி அடித்தார் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஆர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தை இயக்கினார்.

தொடர்ந்து பல படங்கள்

தொடர்ந்து பல படங்கள்

இந்த படம் செம ஹிட்டானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம் என பல வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.

தமிழில் கடைசியாக ஃபிங்கர்டிப்

தமிழில் கடைசியாக ஃபிங்கர்டிப்

தமிழில் கடைசியாக ஃபிங்கர்டிப் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இந்த வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து முதல் முறையாக இந்தி படத்தை இயக்கினார் விஷ்ணு வர்தன். ஷெர்ஷா என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார்.

அஞ்சலி படத்தில் சிறு பையனாக

அஞ்சலி படத்தில் சிறு பையனாக

ஓடிடியில் ரிலீஸ் ஆன இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு வர்தன் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார். 1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் சிறு பையனாக நடித்தார் விஷ்ணு வர்தன்.

கடைசியாக யட்சன் படம்

கடைசியாக யட்சன் படம்

அதனை தொடர்ந்து சத்ரியன் படத்தில் இளம் வயது பன்னீர்செல்வமாக நடித்தார். இருவர் படத்தில் தமிழ்ச் செல்வன் மகனாக நடித்தார். 2015ஆம் ஆண்டு வெளியான இசை படத்திலும் நடித்த விஷ்ணு வர்தன், அதே ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான யட்சன் படத்திலும் நடித்திருந்தார்.

இது முதல் முறையல்ல

இது முதல் முறையல்ல

இந்நிலையில் விஷ்ணு வர்தன், தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கும் தெலுங்கு படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணு வர்தன் தெலுங்கு படத்தை இயக்குவது ஒன்றும் இது முதல் முறையல்ல.

முன்னணி இயக்குநர்களை தொடர்ந்து

முன்னணி இயக்குநர்களை தொடர்ந்து

ஏற்கனவே பவன் கல்யாணை வைத்து பஞ்சா என்ற படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணு வர்தன். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கவுள்ளார். இதேபோல் இயக்குநர் லிங்குசாமியும் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தெலுங்கில் இயக்கவுள்ளார். அந்த வகையில் தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தனும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X