Premistava: தமிழில் வேலைக்கு ஆகாத நேசிப்பாயா படம்.. முயற்சியை கைவிடாத தயாரிப்பாளர் டீம்!

ஐதராபாத்: நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்து சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி சொதப்பிய படம் நேசிப்பாயா. விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவான உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான இந்த படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது.

இந்த படத்தினை தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்து முன்னதாக அறிவித்த நிலையில் நாளைய தினம் படம் திரையரங்குகளில் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. படத்திற்கு பிரேமிஸ்தாவா என்று பெயரிடப்பட்டுள்ளத. இதற்கான ப்ரொமோஷன்களில் தற்போது படக்குழுவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

vishnuvardhan

இயக்குநர் விஷ்ணுவர்தன்: இயக்குநர் விஷ்ணுவர்தன் அஜித்துடன் இணைந்து பில்லா, ஆரம்பம் போன்ற அதிரடி ஆக்சன் படங்களை கொடுத்துள்ள நிலையில், பாலிவுட்டிலும் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.இந்நிலையில் காதலும் காதல் நிமித்தமுமாக அவர் களமிறங்கிய நேசிப்பாயா படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் தமிழில் இயக்கிய நேசிப்பாயா படம் சொதப்பியுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் கூட்டணியில் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய பிளாப்பை கொடுத்துள்ளது.

தெலுங்கில் வெளியாகும் படம்: படத்தின் அதிகமான ஷூட்டிங்கை வெளிநாடுகளில் விஷ்ணுவரதன் படமாக்கியிருந்தார். ஆனால் படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. படத்திற்கு மிக சிறப்பான ப்ரொமோஷன்கள் கொடுக்கப்பட்ட நிலையில், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. முன்னதாக இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் படம் தமிழில் வெற்றி பெறாத நிலையிலும் தெலுங்கில் படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு அதற்கு ஏற்ப செயலாற்றி வருகிறது. படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இதற்கான பிரமோஷன்களில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

vishnuvardhan

பிரேமிஸ்தாவா படம்: இந்த பிரமோஷன்களில் படத்தின் நாயகன ஆகாஷ் முரளி மற்றும் நாயகி அதிதி ஷங்கர் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் படத்தின் பாடலுக்கு சூப்பரான குத்தாட்டம் போட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் தமிழில் வெற்றி பெறாத நிலையிலும் செலவோடு செலவாக தெலுங்கிலும் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு மும்முரம் காட்டியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு பிரேமிஸ்தாவா என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு கொடுப்பார்களா என்பதை இன்னும் சில தினங்களில் பார்க்கலாம்.

vishnuvardhan

தெலுங்கு ரசிகர்களை கவருமா?: மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா அடுத்தடுத்த படங்களில் இணைந்து சிறப்பாக நடித்து வருகிறார். இதனிடையே இளைய மகன் ஆகாஷ், நேசிப்பாயா படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே பிரிட்டோ தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதியுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அவரது நடிப்பும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்ற நிலையில், படத்தின் கதைக்களம் ரசிகர்களை கவரவில்லை. தெலுங்கு ரசிகர்களிடையே இந்தப்படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X