ஆந்திராவுக்கு வா பவரை காட்டுறேன்னு மகேஷ் பாபு சொன்னாரு.. டேய் போடான்னு சொன்னேன்.. விஷ்ணுவர்தன் ஓபன்!

சென்னை: இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்தடுத்து அஜித், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் செயல்பட்டவர். தமிழில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுததுள்ள இவர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தடுத்து அவர் பேட்டிகளை கொடுத்துவரும் நிலையில், நடிகர் அஜித், தன்னுடைய முந்தைய படங்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார்.அந்த வகையில் அஜித்துடன் இருபடங்களை இணைந்து கொடுத்துள்ள விஷ்ணுவர்தன், மீண்டும் அவரை இயக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்த நிலையில் அது கைகூடவில்லை என்றும் கூறியிருந்தார்.

vishnuvarthan mahesh babu

இயக்குநர் விஷ்ணுவர்தன்: அஜித், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜித்துடன் பில்லா, ஆரம்பம் என அடுத்தடுத்த படங்களை அதிரடி வெற்றியாக்கினார். இந்தப் படங்களில் அஜித்தின் ஸ்டைல் மற்றும் மாஸ் தற்போதும் ரசிகர்களின் ஃபேவரிட்டாக உள்ளது. இதேபோல சல்மான்கானுடன் பாலிவுட்டில் தி புல் படத்திலும் விஷ்ணுவர்தன் இணைந்துள்ளார். முன்னதாக பாலிவுட்டில் இவரது இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா படமும் மிகச்சிறப்பாக அமைந்தது. கார்கில் போரை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.

நேசிப்பாயா படம்: ஸ்டைலிஷ்ஷான கேங்ஸ்டர் படங்களையும் திரில்லர் பாணி படங்களை கொடுத்துவந்த இவர் முதல்முறையாக வேறொரு ஜானரில் கொடுததிருந்த இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மிகச்சிறப்பாக காணப்பட்டார். படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ் படத்தில் இணைந்துள்ளார். மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் கூட்டணியில் நேசிப்பாயா படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஷ்ணுவர்தன் ஈடுபட்டு வருகிறார்.

அஜித்தை இயக்கும் வாய்ப்பு: இதற்கான அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். தன்னுடைய படங்கள் குறித்தும் அஜித் குறித்தும் பேசி வருகிறார். அஜித்துடன் பில்லா, ஆரம்பம் படங்களில் இணைந்திருந்த விஷ்ணுவர்தன், அந்தப் படங்களின் அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் தான் அப்போது சல்மான்கான் படத்தில் கமிட்டானதால் அந்தப் பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனிடையே, பில்லா 3 படத்தை இயக்க கிடைத்த வாய்ப்பிற்கு தான் நோ சொல்லிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகேஷ்பாபுவை போடான்னு சொன்னேன்: இந்நிலையில் தெலுங்குப்படங்களை இயக்கவும் வாய்ப்பு கிடைத்ததாக விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். ஸ்கூலில் தெலுங்குப்பட நடிகர் மகேஷ்பாபு, தன்னுடைய பென்ச் மேட் என்று கூறியுள்ள விஷ்ணுவர்தன், ஆந்திராவிற்கு வரும்படியும் தான் எவ்வளவு பெரிய ஆள் தன்னுடைய பவர் என்ன என்பதை காட்டுவதாக மகேஷ்பாபு கூறுவார் என்று குறிப்பிட்டுள்ள அவர், டேய் போடா உன் பவரை நான் எதுக்கு பார்த்துக்கிட்டு என்று பதிலளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், அவருடன் விஷ்ணுவர்தன் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X