Vishnuvarthan: மிஸ்ஸான வாய்ப்பு.. மீண்டும் அவரை இயக்க ஆசை.. பில்லா இயக்குநர் ஓபன்!
சென்னை: நடிகர் ஆகாஷ் முரளியின் என்ட்ரி படமாக உருவாகியுள்ளது நேசிப்பாயா. இந்தப் படத்தை பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கி முடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாகியுள்ளார் அதிதி ஷங்கர்.
அதிரடி ஆக்ஷன் படங்களை கொடுத்துள்ள விஷ்ணுவர்தன் இந்தப் படத்தில் ரொமாண்டிக் ஜானரை கையில் எடுத்துள்ளார். முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் கதைக்களத்தில் இந்தப் படத்தை எடுத்துள்ள போதிலும் அனைத்து தரப்பினரையும் இந்தப் படம் கவரும் என்று விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

நேசிப்பாயா படம்: நடிகர் ஆகாஷ் முரளி -அதிதி ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ளது நேசிப்பாயா படம். இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு போர்ச்சுக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பில்லா, ஆரம்பம் என அஜித்தின் மாஸ் படங்களை இயக்கி வரவேற்பு பெற்ற விஷ்ணுவர்தன் இயக்கி முடித்துள்ளார். மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி இந்தப் படத்தின் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவரது மாமனாரும் விஜய்யின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான ஷேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக ஆகாஷ் முரளியின் மனைவி சினேகா பிரிட்டோ இணைந்துள்ளார்.
இயக்குநர் விஷ்ணுவர்தன்: தான் ஷெர்ஷா படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாக இருந்தபோதுதான் நேசிப்பாயா படத்தின் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும் தன்னிடம் ரொமாண்டிக் ஜானரில் ஒரு கதைக்களம் இருந்த நிலையில் அதையே இந்தப் படத்தின் கதையாக மாற்றியதாகவும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சில ஷெட்யூல் தமிழகத்தில் நடந்த நிலையில் கதைப்படி மொழி தெரியாத ஒரு நாடு தேவைப்பட்டதால் போர்ச்சுக்கல்லில் படத்தின் அதிகமான சூட்டிங்கை எடுத்ததாகவும் விஷ்ணு வர்தன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு பிரிட்டீஷை சேர்ந்த கேமராமேன் பிரைசன், ஸ்டண்ட் மாஸ்டராக ஸ்பெயினை சேர்ந்த பெட்ரிகோ பணியாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விஷ்ணுவர்தன் வருத்தம்: படத்தில் பிரபு, சரத்குமார், குஷ்பூ, கல்கி கொச்சலின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்திற்காக பேட்டிகளை விஷ்ணுவர்தன் கொடுத்துவருகிறார். அப்போது அவர் அஜித்துடனான பயணம் குறித்து பேசியுள்ளார். பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய பிறகு, 2 -3 முறை மீண்டும் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை ஏற்க முடியாமல் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். ஒருமுறை பாலிவுட்டில் சல்மான் கானுடன் படம் எடுக்கும் சூழல் இருந்ததால் அஜித்துடன் இணையும் வாய்ப்பு மிஸ் ஆனதாக தெரிவித்துள்ளார்.
அஜித்தை இயக்க ஆசை: அடுத்ததாக பில்லா 3 படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த போது, தான் அதை வேண்டாம் என்று விட்டுவிட்டதாக விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க விருப்பமாக உள்ளதாக விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். அஜித் -விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளியான பில்லா, ஆரம்பம் படங்கள் அஜித்தின் கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்திருந்தன. அஜித்தை அவ்வளவு ஸ்டைலிஷ்ஷாக விஷ்ணுவர்தன் இந்தப் படங்களில் காட்டியிருந்தார். அஜித் மட்டுமில்லாமல் நயன்தாராவிற்கும் இந்தப் படங்கள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.


Click it and Unblock the Notifications











