மனிதாபிமானம் செத்துபோய்விட்டது.. கையாடல் புகார் கூறிய பாக்யராஜுக்கு விசு உருக்கமான பதில்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை மூலம் 37 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்பட்ட புகாருக்கு இயக்குனரும் நடிகருமான விசு உருக்கமாக பதிலளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை மூலம் 37 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்பட்ட புகாருக்கு இயக்குனரும் நடிகருமான விசு உருக்கமாக பதிலளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்து ரூ.37 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் தலைவரும் திரைப்பட இயக்குனருமான விசு, முன்னாள் செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

விசு பதிலடி
மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான விசு மீது பாக்யராஜ் கூறிய இந்த புகார் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு இயக்குநர் விசு உருக்கமாக பதிலளித்துள்ளார்.

அதிர்ச்சியாக உள்ளது
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ‘எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறேன். இயக்குனர் பாக்யராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று என் மீது பண மோசடி புகார் அளித்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

பணம் பத்திரமாக உள்ளது
அறக்கட்டளையில் எந்த மோசடியும் நடக்கவில்லை. பணம் கையாடல் செய்யப்படவும் இல்லை. அந்த பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறது. அதில் வரும் வட்டியில் நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன.

மனிதாபிமானம் செத்துபோய்விட்டது
பாக்யராஜ் என்மீது போலீசில் புகார் அளித்ததன் மூலம் மனிதாபிமானம் செத்துப்போய் விட்டதாக நினைக்கிறேன். ஆண்டவன் கருணையால் உடல்நலம் தேறி திரும்பி வருவேன். அப்போது இந்த மோசடி புகாரை எதிர்த்து நிற்பேன்.

ஒரு பைசா கூட எடுக்கவில்லை
நான் நாணயத்தோடு பிறந்தவன். நிறைய பேருக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். நேர்மையாக வருமான வரி கட்டுகிறேன். சங்க அறக்கட்டளையில் இருந்து ஒரு பைசா கூட எடுத்தது இல்லை.' இவ்வாறு விசு விளக்கம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











