twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசுவுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா.. கடைசி ஆசை நிறைவேறாமலேயே மரணித்துவிட்டாரே!

    |

    சென்னை: நடிகரும் இயக்குநருமான விசுவின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே அவர் மரணித்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    Actor/Director Visu Last Respect | கண்கலங்கிய திரைத்துறையினர்

    இயக்குநரும் நடிகருமான விசு, இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இயக்குநரானார். கண்மணி பூங்கா என்ற படம்தான் விசு முதலில் இயக்கிய திரைப்படம் ஆகும்.

    விசு உதவி இயக்குநராக இருந்தபோதே நடிக்க தொடங்கிவிட்டார். விசு இயக்கிய படங்கள் பெரும்பாலும் குடும்ப சித்திரங்கள்தான்.

    கதாப்பாத்திரங்கள்

    கதாப்பாத்திரங்கள்

    அவரது படத்தில் இடம் பெறும் வசனங்களும் கதாப்பாத்திரங்களின் தேர்வும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். விசு இயக்கத்தில் வெளியான பெண்மணி அவள் கண்மணி, சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி, கெட்டி மேளம், டவுரி கல்யாணம், புதிய சகாப்தம், வேடிக்கை என் வாடிக்கை, பட்டுக்கோட்டை பெரியப்பா, வா மகளே வா ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    விசு ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமின்றி சிறந்த நடிகரும் ஆவார். அவர் இயக்கிய படங்கள் மட்டுமின்றி இயக்காத பல படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகர் விசு. வீடு மனைவி மக்கள், வனஜா கிரிஜா, அருணாச்சலம், மாயா பஜார், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    நேற்று முன்தினம் மரணம்

    நேற்று முன்தினம் மரணம்

    கடந்த சில மாதங்களாய் சிறு நீரகக்கோளாறால் பாதிக்கப்பட்ட விசு நேற்று முன்தினம் மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சென்னை துரைப்பாக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    கடைசி ஆசை

    கடைசி ஆசை

    அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இயக்குநர் விசுவின் அவரது உடல் நேற்று பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் விசு அவரது கடைசி ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த தகவல் வெளியாகியுள்ளது.

    ஜோதிகாவிடம் கதை

    ஜோதிகாவிடம் கதை

    அதாவது, 75 வயதான இயக்குநர் விசு கடைசியாக சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தாராம். இதற்கான கதையை எழுதி பல தயாரிப்பாளர்களை சந்தித்து பேசி வந்திருக்கிறார் விசு. கடைசியாக நடிகை ஜோதிகாவை சந்தித்து கதையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    கடைசி நிறைவேறாமல்

    கடைசி நிறைவேறாமல்

    ஆனால் அந்த படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே விசு மரணமடைந்துவிட்டார். விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படம் பெரும் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டு விசு மணல் கயிறு இரண்டாம் பாகத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Visu's last wish was not full filled. Visu wanted to direct Samsaram athu Minsaram movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X