உண்மையிலேயே பெரிய மனுஷன் தான்.. மோகன் கடைசி வரை அதை செய்யவே இல்லை.. பாராட்டிய பிரபலம்!
சென்னை: மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த மோகன் உண்மையிலேயே பெரிய மனுஷன் தான் என இயக்குநர் ஒருவர் பாராட்டி உள்ளார்.
மைக் மோகன்: மூடு பனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்தார். 80 மற்றும் 90கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் மோகன், ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி என பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரேவதியுடன் இவர் சேர்ந்து நடித்த மெளன ராகம் திரைப்படத்தையும் அந்த படத்தின் பாடலையும் இன்றைய 2கே கிட்ஸ்களும் கொண்டாடி வருகின்றனர். பிஸியாக நடித்து வந்த மோகன் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போனார்.

கோட் படத்தில்: தற்போது, விஜய்யின் தளபதி68 படமான கோட் படத்தில்,வில்லனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். கதாநாயனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த மைக் மோகன், கோட் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமலும் காரணம்: மோகன் இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு கமலும் ஒரு வகையில் காரணமாக அமைந்துவிட்டார். ஏன் என்றால், 80களில் கமல்ஹாசன் பிற மொழிப்படங்களிலும், இந்திப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்துக்கொண்டு இருந்ததால், கோலிவுட்டில் அந்த இடத்தை மோகன் பூர்த்தி செய்துவிட்டார். மேலும், இவரின் வெற்றிக்கு முதுகு எலும்பாக இருந்தவர் இளையராஜா. கமலுக்கு அடுத்தபடி காதல் திரைப்படங்களில் வித்தியாசமாக நடித்து பெண் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மோகன், டிசைனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மோகன் இதுவரை தனது மனைவியை பொது இடத்தில் அறிமுகப்படுத்தியதே இல்லை.
கிசுகிசு: மைக் மோகன் குறித்து, யார் படத்தை இயக்கிய யார் கண்ணன் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். இதில்,மோகன் தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தாரோ,அதைவிட அதிகமாக கிசுகிசுவில் சிக்கினார். இவர் எந்த நடிகையுடன் சேர்ந்து நடித்தாலும், அந்த நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டு விடுவார். இதற்கு காரணம் என்னவென்றால், எந்த நடிகையுடன் நடித்தாலும், அந்த நடிகையுடன் கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகிவிடும்.
சிவாஜி போல: இந்நிலையில் மைக் மோகன் குறித்து பேட்டி அளித்துள்ள இயக்குநர் கண்ணன், மிகச்சிறப்பான நடிகராக திகழ்ந்த மைக் மோகன், நடிகர் திலகம் சிவாஜியைப் போல, கடைசி வரை தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளாமல் இருந்தார். மேலும், பல படங்களை இயக்க உதவியும் செய்தார். இவர் நினைத்து இருந்தால் தனது சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தி இருக்கலாம். ஆனாலும் தனது சம்பளத்தை கட்டுக்குள் வைத்து, பல படங்களில் நடித்து பல இயக்குனர்களின் வாழ்க்கையை சிறக்க வைத்திருந்தாரர் என்று யார் கண்ணன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











