»   »  பிரபல இயக்குனர் மகன் கைது சென்னை:பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகனும், நடிகருமான கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தனது தந்தையின்கையெழுத்தைப் போட்டு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.கே.ஆர்.விஜயா அறிமுகமான கற்பகம் உள்ளிட்ட பல்வேறு குடும்பத் திரைப்படங்களை இயக்கியவர்கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தனது முதல் படத்தின் பெயரில், கற்பகம் ஸ்டுடியோ என்ற ஸ்டுடியோவை சென்னைவிருகம்பாக்கத்தில் இவர் வைத்துள்ளார். ஸ்டுடியோவின் ஒரு பங்குதாரராக அவரது சகோதரர் சபரிநாதன் இருக்கிறார்.கே.எஸ்.ஜி.யின் மகன் வெங்கடேஷ். டிவி நிாடகங்கள் மற்றும் சில திரைப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு, ஆட்டோ மீட்டர்தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இளங்கோவன் என்பவர் அறிமுகமானார். இளங்கோவன் வங்கி கடனுக்காகசிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.இதை அறிந்த வெங்கடேஷ், தான் உதவுவதாக கூறி தனது தந்தையின் கையெழுத்தை அவரே போட்டு போலியான ஆவணம்ஒன்றை தயாரித்து இளங்கோவனிடம் கொடுத்துள்ளார். இதற்காக ரூ. ஒன்றரை லட்சம் கமிஷன் தொகையைஇளங்கோவனிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.அந்த போலி ஆவணத்தைக் கொடுத்து வங்கி ஒன்றில் இளங்கோவன் கடனுக்கு விண்ணப்பித்தார். ஆவணத்தைப் பரிசீலித்தவங்கி நிர்வாகம், அது போலியான ஆவணம் என்பதைக் கண்டுபிடித்தது. இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது.விசாரணையில் வெங்கடேஷின் மோசடி தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

பிரபல இயக்குனர் மகன் கைது சென்னை:பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகனும், நடிகருமான கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தனது தந்தையின்கையெழுத்தைப் போட்டு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.கே.ஆர்.விஜயா அறிமுகமான கற்பகம் உள்ளிட்ட பல்வேறு குடும்பத் திரைப்படங்களை இயக்கியவர்கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தனது முதல் படத்தின் பெயரில், கற்பகம் ஸ்டுடியோ என்ற ஸ்டுடியோவை சென்னைவிருகம்பாக்கத்தில் இவர் வைத்துள்ளார். ஸ்டுடியோவின் ஒரு பங்குதாரராக அவரது சகோதரர் சபரிநாதன் இருக்கிறார்.கே.எஸ்.ஜி.யின் மகன் வெங்கடேஷ். டிவி நிாடகங்கள் மற்றும் சில திரைப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு, ஆட்டோ மீட்டர்தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இளங்கோவன் என்பவர் அறிமுகமானார். இளங்கோவன் வங்கி கடனுக்காகசிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.இதை அறிந்த வெங்கடேஷ், தான் உதவுவதாக கூறி தனது தந்தையின் கையெழுத்தை அவரே போட்டு போலியான ஆவணம்ஒன்றை தயாரித்து இளங்கோவனிடம் கொடுத்துள்ளார். இதற்காக ரூ. ஒன்றரை லட்சம் கமிஷன் தொகையைஇளங்கோவனிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.அந்த போலி ஆவணத்தைக் கொடுத்து வங்கி ஒன்றில் இளங்கோவன் கடனுக்கு விண்ணப்பித்தார். ஆவணத்தைப் பரிசீலித்தவங்கி நிர்வாகம், அது போலியான ஆவணம் என்பதைக் கண்டுபிடித்தது. இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது.விசாரணையில் வெங்கடேஷின் மோசடி தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகனும், நடிகருமான கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தனது தந்தையின்கையெழுத்தைப் போட்டு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கே.ஆர்.விஜயா அறிமுகமான கற்பகம் உள்ளிட்ட பல்வேறு குடும்பத் திரைப்படங்களை இயக்கியவர்கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தனது முதல் படத்தின் பெயரில், கற்பகம் ஸ்டுடியோ என்ற ஸ்டுடியோவை சென்னைவிருகம்பாக்கத்தில் இவர் வைத்துள்ளார். ஸ்டுடியோவின் ஒரு பங்குதாரராக அவரது சகோதரர் சபரிநாதன் இருக்கிறார்.

கே.எஸ்.ஜி.யின் மகன் வெங்கடேஷ். டிவி நிாடகங்கள் மற்றும் சில திரைப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு, ஆட்டோ மீட்டர்தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இளங்கோவன் என்பவர் அறிமுகமானார். இளங்கோவன் வங்கி கடனுக்காகசிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

இதை அறிந்த வெங்கடேஷ், தான் உதவுவதாக கூறி தனது தந்தையின் கையெழுத்தை அவரே போட்டு போலியான ஆவணம்ஒன்றை தயாரித்து இளங்கோவனிடம் கொடுத்துள்ளார். இதற்காக ரூ. ஒன்றரை லட்சம் கமிஷன் தொகையைஇளங்கோவனிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்த போலி ஆவணத்தைக் கொடுத்து வங்கி ஒன்றில் இளங்கோவன் கடனுக்கு விண்ணப்பித்தார். ஆவணத்தைப் பரிசீலித்தவங்கி நிர்வாகம், அது போலியான ஆவணம் என்பதைக் கண்டுபிடித்தது. இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது.

விசாரணையில் வெங்கடேஷின் மோசடி தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil