GOAT: அண்ணனுக்கு வாழ்த்து சொன்ன தம்பிகள்.. பாச மழையில் தளபதியின் கோட்!
சென்னை: தளபதி விஜய் (Vijay) இரட்டை வேடங்களில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கோட் (GOAT). இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் இந்தியா மட்டும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் படம் தமிழ் திரையுலகில் முதல் நாளில் வசூலில் அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் படத்திற்கு நடிகர் விஜய்யை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநர்களான அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் காட்சிகள் உள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்த்திப்படுத்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தினை திரைக்கதையாகவும், டெக்னிக்கலாகவும் மிகவும் சிறப்பாகவே உருவாக்கியுள்ளோம். பல காட்சிகள் படப்பிடிப்புத் தளத்தில் மேலும் மெருகேற்றப்பட்டது. இதுவரை நீங்கள் பார்க்காத விஜய்யை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள் என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

மேலும் படத்திற்கு காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதால் ரசிகர்கள் தொடங்கி திரையரங்கத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தினை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க நடிகர் விஜய் திட்டமிடப்பட்டிருபதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிராமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன், த்ரிஷா மற்றும் அஜித் உள்ளிட்டோர் கேமியோ செய்திருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றது. ஆனால் இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

படக்குழு: படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த பாடகி பவதாரிணி குரல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர் குரலில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
டீ - ஏஜிங்: படத்தில் விஜய் மொத்தம் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இதனால் விஜய்யின் ஒரு கதாபாத்திரம் டீ- ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் படம் முழுவதும் வருவதைப் போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், 18 வயது கதாபாத்திரமும் டீ- ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்பார்க் பாடலில் டீ-ஏஜிங் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்காததால், மீண்டும் டீ-ஏஜிங் பணிகள் செய்யப்பட்டுள்ளது.

1100 திரையரங்குகள்: கோட் படம் தமிழ் நாடு முழுவதும் உள்ள 1,100 திரையரங்குகளிலும் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளும் உள்ளன. அவைகளைக் கணக்கில் எடுத்தால் படம் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை, முதல் நாளிலேயே பல ஆயிரங்களை அசால்ட்டாக தாண்டிவிடும். ஐமேக்ஸ் திரையரங்கிலும் படம் ரிலீஸ் ஆகின்றது. இது இல்லாமல், அண்டை மாநிலங்கள், ஹிந்தி வெர்ஷன் வெளிநாடுகள் என படத்தின் ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை என்பது இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு இருக்கப்போகின்றது என்பது மட்டும் தெளிவாகத்தெரிகின்றது.

தம்பிகள் வாழ்த்து: இந்நிலையில் படம் வெற்றி பெற இயக்குநர்கள் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











