வாரிசாக இல்லாமல், ஓட்டுவங்கி கட்சியின் பலம் இல்லாமல்.. சுயம்பாக.. சீமானுக்கு பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நடந்த முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

நழுவவிட்ட சீமான்
234 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியை தோல்வியை தழுவியது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 48 ஆயிரத்து 597 வாக்குகளை பெற்றார். 39,588 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.

மூன்றாவது இடம்
234 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு அடுத்தப்படியாக நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

சீமானுக்கு வாழ்த்து
எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா பிரபலங்களும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கட்சி வளர்ச்சி..
இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது.. சீமானுக்கு வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார்.

சுயம்பாக வளர்ந்து
இதேபோல் இயக்குநர் பேரரசு பதிவிட்டுள்ள ட்வீ ட்டில்,
எந்தத் தலைவரின் வாரிசாக இல்லாமல், ஓட்டுவங்கி உள்ள கட்சியின் பின்பலம் இல்லாமல், சுயம்பாக வளர்ந்து, இன்று மூன்றாவது இடத்தில் தன் கட்சியை நிலைநிறுத்தி
உண்மையான, உணர்வான ஓட்டுக்களை வாங்கிருக்கும்
அண்ணன் சீமான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











