நீங்கள் கடவுளைப்போல.. செல்வராகவனை பாராட்டிய சேரன்.. பதிலுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட்டுக்கு இயக்குநர் சேரன் அளித்துள்ள பதில் ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
நீங்கள் கடவுளைப் போலவே செல்வா என மனமார பாராட்டி உள்ளார் இயக்குநர் சேரன்.
பதிலுக்கு இயக்குநர் சேரனுக்கு நன்றி தெரிவித்த செல்வராகவன் ஆட்டோகிராப் படத்தை பாராட்டி பதில் அளித்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் கலக்கும் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வரும் அவர் ட்விட்டரில் உத்வேகம் அளிக்கும் ட்வீட்களை போட்டு வைரலாக்கி வருகிறார்.

கடவுள் ஒரு கதவை திறக்கிறார்
காலம் வந்து விட்டது வேந்தே என சமீபத்தில் ட்வீட் போட்ட செல்வராகவனை ஆயிரத்தில் ஒருவன் ரசிகர்கள் மொய்த்து விட்டனர். இந்நிலையில், அடுத்தபடியாக "வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார்.. வேதனை இன்றி விடியல் இல்லை.." என செல்வராகவன் பதிவிட்டதை இயக்குநர் சேரன் பார்த்துள்ளார்.

நீங்கள் கடவுளைப்போல
இயக்குநர் செல்வராகவனை போலவே இயக்குநர் சேரனும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள நிலையில், செல்வராகவனின் பதிவை பார்த்த சேரன், "சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதனாக இருப்போம்.. சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம்.. வாருங்கள்.. உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப்போலவே செல்வா..." என பாராட்டி உள்ளார்.

ஆறுதல் தந்த ஆட்டோகிராப்
"அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்! தங்களின் " ஆட்டோகிராப் " உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்களின் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்!" என பதிலுக்கு இயக்குநர் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தை குறிப்பிட்டு பாராட்டி நன்றி கூறியுள்ளார் செல்வராகவன்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் திரையுலகின் இரு சிறந்த இயக்குநர்களும் இப்படி தங்களுக்குள் பாராட்டுக்களையும் நன்றியையும் கூறிக் கொள்வதை பார்த்த ரசிகர்கள் அவர்களின் ட்வீட்டுகளுக்கு கீழ் உங்கள் இருவரது காம்பினேஷனில் சீக்கிரமே ஒரு படத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம் என்றும் இருவரது படைப்புகளை திரையில் காண வெயிட்டிங் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











