அடுத்த படம் யாருடன்.. விஜய்க்காக போட்டிப்போடும் இயக்குநர்கள்!

சென்னை : நடிகர் விஜய்யின் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில், அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

நடிகர் விஜய்யின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரிசு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியான இப்படத்தில் விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜனவரி 11ந் தேதி வெளியான இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிசில் ரூ.300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேமிலி செண்டிமென்ட் கதை அம்சத்தைக்கொண்ட இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷியாம், பிரபு என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

வாரிசு

வாரிசு

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு வெளியானது. தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய், திரிஷா, அர்ஜூன், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் கமிட்டாகி உள்ளனர்.

லியோ மாஸ் வசனம் Bloody Sweet

லியோ மாஸ் வசனம் Bloody Sweet

லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. வீடியோவில் பின்னணியில் ஆங்கில பாடல் ஒலிக்க விஜய் சாக்லேட்டை தயார் செய்து கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் நெருப்பு குழம்பில் கத்தி ஒன்றும் தயார் செய்யப்படுகிறது. அந்தக் கத்தியை சாக்லேட் க்ரீமுக்குள் நனைத்து Bloody Sweet என சொல்லுகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

அடுத்த இயக்குநர் யார்

அடுத்த இயக்குநர் யார்

தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால், விஜய் அடுத்து எந்த இயக்குநருடன் இணைய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தளபதி 68 திரைப்படத்தை, அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ அந்த படத்தை முடித்து விட்டு நான்காவது முறையாக விஜய்யுடன் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுக்குள்ள தளபதி 69ஆ

அதுக்குள்ள தளபதி 69ஆ

தளபதி 68 படத்திற்கான கூட்டணியே உறுதியாகாத நிலையில், தளபதி 69 திரைப்படத்தில் மீண்டும் வாரிசு இயக்குநர் வம்சி பைட்டிபள்ளியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு திரைப்படம் வசூலை வாரிக்குவித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்ததால் மீண்டும் வம்சியின் படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அருமையான ஸ்கிரிப்ட் தயார்

அருமையான ஸ்கிரிப்ட் தயார்

இப்படி விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இயக்குனர் பத்ரி வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது நண்பர் நேசன் விஜய்க்காக ஒரு அருமையான ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டால் நிச்சயம் விஜய் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு இயக்குநர்களும போட்டி போட்டுக்கொண்டு விஜய்யின் அடுத்தபட அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X