twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எழுத்தாளர் இல்லாததால் தவிக்கும் இயக்குநர்கள்!

    By Shankar
    |

    Recommended Video

    ரஜினி, கமலுக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன்!- வீடியோ

    திரைக்கதை திலகம் பாக்யராஜ் ஒருமுறை சொன்னார் 'நான் ஏதோ ஆர்வத்துல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு டைட்டில்ல போட ஆரம்பிச்சேன். பின்னாடி வந்தவங்கள்லாம் அதை எடுத்துகிட்டு தானே எல்லாத்தையும் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்காங்க... அது தப்பு. ரைட்டரை பக்கத்துல வெச்சுக்கறது தான் நல்லது,' என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார்.

    நல்ல எழுத்தாளர்களை அருகில் வைத்துக்கொண்டு அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி அதனை இயக்கிய வரையிலும் வெற்றிபெற்ற இயக்குநர்கள் தானே இறங்கி தோற்றுப்போய் தவிக்கிறார்கள்.

    Directors fail without writers

    மணிரத்னம், ஷங்கர் இருவரின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்தது எழுத்தாளர் சுஜாதா. சுஜாதா மறைவிற்கு பிறகு நாவல், பத்திரிகை, சினிமா என எல்லா தளங்களிலுமே வெற்றிடம் ஏற்பட்டது. மணிரத்னமும் ஷங்கரும் இன்னும் தடுமாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

    அதேபோல் தான் சுசீந்திரனும். பாண்டிய நாடு வரை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி உடன் இருந்தார். அவர் விலகிய பின்னர் நெஞ்சில் துணிவிருந்தால் வரை அடிதான் வாங்குகிறார்.

    இளம் இயக்குநர்களுக்கு இது ஒரு பாடம். இனியாவது ஒரு நல்ல எழுத்தாளரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

    "கதாசிரியர் என்ற இனமே அழிந்து போனது கவலையாக உள்ளது. இப்போதுள்ளவர்கள் கதை வைத்திருந்தால், அதை தானே இயக்கி நடிக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு காரணம் கதாசிரியர்களுக்கான ஊதியம் குறைவு. நல்ல சம்பளம் கொடுத்து கதையை வாங்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்," என்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

    ரெண்டு எழுத்தாளர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு கதை என்று தன் பெயரை போட்டுக்கொள்ளும் இயக்குநர் கூட காப்பி அடித்துதான் கதையை படத்தில் வைக்கிறார். விஷயமே இல்லை... பேரு வாங்க மட்டும் ஆசை?

    English summary
    A small request to young and new directors. Please use the writers for making new scripts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X