புதுச்சேரி அருகே விபத்து: இயக்குநர்கள் ஸெல்வன்-ஜீவன் படுகாயம்

'சூரி,' கிருஷ்ணலீலை' ஆகிய படங்களை இயக்கியவர், ஸெல்வன். இவர் இப்போது, 'மாயவரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரும், 'ஞாபகங்கள்,' மயிலு' ஆகிய படங்களை இயக்கிய ஜீவனும் நண்பர்கள்.
இருவரும் நண்பர் ஒருவரைப் பார்க்க, சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றார்கள். மரக்காணம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டின் குறுக்கே ஒரு மாடு பாய்ந்தது.
உடனே டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் கார் அவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ரோட்டோரம் நின்ற மரத்தில் மோதியது. அதில் டைரக்டர்கள் ஸெல்வன், ஜீவன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.
அந்த வழியாக காரில் வந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, 2 இயக்குநர்களையும் மரக்காணத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். முதல் உதவி சிகிச்சை அளித்தபின், இருவரையும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அவர்களின் குடும்பத்தினர்.


Click it and Unblock the Notifications











