அடுத்த 15 வருசத்துக்கு இளையராஜா ஆரோக்கியத்துடன் இருக்க என்ன செய்யனும்.. மனம் உருகிய இயக்குநர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவின் அடையாளம் என்பதை விட தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்காக கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக விளங்கி வருபவர் இசைஞானி இளையராஜா. இவரது இசை 50 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன தாக்கத்தினை ஏற்படுத்தியதோ, அதே தாக்கத்தினை இப்போது இவரது இசையில் வெளியாகியுள்ள தினம் தினமும் பாடல் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த இசை அமைப்பாளராக விளங்கும் இளையராஜா இதுவரை அவுட்டேட்டட் ஆகிவிட்டார் என்றச் சொல்லவே முடியாது. இவர் இசையின் முலம் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தினையும் வீச்சினையும் தமிழ் திரையுலகில் யாருமே செய்திடவில்லை.
ஆமாம், இசை - இளையராஜா என்றால் அந்தப் படம் ஹிட் என்ற சூழலை, ஏற்படுத்தியவர் இளையராஜா. அப்படியான சூழலையோ மார்க்கெட்டினையோ அதன் பின்னர் வந்த இசை அமைப்பாளர்கள் ஏற்படுத்தவே இல்லை. மிகவும் சீனியர் இசை அமைப்பாளர், சீனியர் சினிமாக்காரராக இருப்பதால் அவரிடம் திட்டு வாங்கிக் கொண்டும் அவரிடம் பணியாற்றும் இயக்குநர்கள் இன்றைக்கும் உள்ளார்கள். அவருடன் சண்டையிட்டுக் கொண்டும் அவருடன் பணியாற்றும் இயக்குநர்கள் இப்போதும் உள்ளார்கள்.

இளம் வயது இயக்குநர்களுடன் பணியாற்றமாட்டேன், மார்கெட்டில் கொடி கட்டிப் பறக்கும் இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டும்தான் இசை அமைப்பேன் என எந்த லிமிட்டேஷனும் இல்லாமல் இருக்ககூடிய இசை அமைப்பாளர் இளையராஜா. இவரது இசை இந்த ஆண்டு, அறிமுக இயக்குநர் பாரி இளவழகனின் ஜமா படமும் ரிலீஸ் ஆனது. அதேநேரத்தில் வெற்றி மாறனின் விடுதலை படத்தின் 2ஆம் பாகத்தின் பாடலும் ரிலீஸ் ஆகி பெரும் பாராட்டைக் குவித்துள்ளது.

5 மணி நேரம்: இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அதில் சுமார் 5 மணி நேரம் இளையராஜா குறித்து பேசியதாகவும், அதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாகவும் கூறினார். இது தொடர்பாக இயக்குர் மிஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டிகளில் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறியுள்ளார். பொதுவாகவே மிஷ்கின் அனைத்து இயக்குநர்களையும் இளையராஜாவுடன் ஒருமுறையாவது பணியாற்றிவிடவேண்டும் எனக் கூறுபவர்.

இளையராஜா: ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற படங்களில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியவர் மிஷ்கின். இவர் தொடர்ந்து அறிவுருத்திய பின்னர்தான், இயக்குநர் வெற்றி மாறன் தனது விடுதலைப் படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் பல இயக்குநர்களையும் இளையராஜாவோடு இணைந்து பணியாற்ற வலியுறுத்திக் கொண்டே உள்ளார்.

15 ஆண்டுகளுக்கு: இப்படியான நிலையில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது அடுத்த படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில், இருவரும், அதாவது இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் தியாகராஜன் குமாரராஜாவும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது இளையராஜா அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு சாகாமல், பரிபூர்ணமான ஆரோக்கியத்துடன் வாழவேண்டும், இசை அமைக்கவேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என பேசிக்கொண்டதாக கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இருவரும் இளையராஜா மீது இவ்வளவு அன்பு வைத்துள்ளார்களே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











