தடுப்பூசி போட்டா நம்மளோட இறப்பு 10,152 மடங்கு குறையுது... கணக்கு போட்ட கோமாளி டைரக்டர்

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

பிரபலங்களும் தொடர்ந்து தங்களது கோவிட் -19 தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவும் தங்களது கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகமான உயிரிழப்புகள்

அதிகமான உயிரிழப்புகள்

கொரோனா பாதிப்பு இந்திய அளவில் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் லட்சக்கணக்கில் தினந்தோறும் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகின்றன.

பிரபலங்கள் நடவடிக்கை

பிரபலங்கள் நடவடிக்கை

ஆயினும் மக்களிடம் இன்னும் கோவிட் -19 குறித்த சரியான புரிதலும், விழிப்புணர்வும் ஏற்படவில்லை. அதன் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் பிரபலங்களும் தங்களால் இயன்ற அளவில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்பூசி போட்ட நடிகர்கள்

தடுப்பூசி போட்ட நடிகர்கள்

சமீபத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டவர்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு, மக்கள் இந்த கடினமான காலத்தில் செய்ய வேண்டியவை குறித்து பேசினர். மேலும் பல நடிகர்கள் நடிகைகள், தங்களது கோவிட் -19 தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.

தடுப்பூசி போட ரசிகர்கள் ஆர்வம்

தடுப்பூசி போட ரசிகர்கள் ஆர்வம்

மேலும் தங்களது சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை இணைத்து, மக்களும் போட்டுக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். தங்களது விருப்பத்திற்குரிய நடிகக்ள் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதை எடுத்துக் காட்டாக கொண்டு ரசிகர்களும் தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.

முதல் டோஸ் போட்டனர்

இந்நிலையில் கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோரும் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டனர். இதுகுறித்து பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

10,152 முறை அதிகரிப்பு

10,152 முறை அதிகரிப்பு

மேலும் கோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு தடுப்பூசி போட்டு உயிரிழக்கும் அபாயத்துடன் கணக்கிடுவையில் தடுப்பூசி போட்டு உயிர்வாழும் வாய்ப்பு 10,152 முறை அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தரவுகளையும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X