அந்த மாதிரி படம் அமைஞ்சிதுன்னா.. அதுக்கப்புறம் ரிடையர்டு ஆயிடலாம்.. புஷ்கர் -காயத்ரி சொன்னத பாருங்க!

சென்னை : இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இந்திய அளவில் சிறப்பான இயக்குநர்களாக மாறியுள்ளனர்.

விக்ரம் வேதா படத்தின் மிரட்டலான ரெஸ்பான்சிற்கு பிறகு அதே படத்தை பாலிவுட்டில் இயக்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்று யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி

இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி, தம்பதிகளாக படங்களை இயக்கி வருகின்றனர். கல்லூரி காலத்தில் துவங்கிய இவர்களது இந்தப் பயணம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2017ல் இவர்களது மிரட்டலான இயக்கத்தில் விக்ரம் வேதா படம் வெளியானது. இந்தப் படம் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் கோலிவுட்டில் ஏற்படுத்தியது.

விக்ரம் வேதா படம்

விக்ரம் வேதா படம்

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், கதிர், ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை மிரட்டலாக அமைந்த நிலையில், தங்களது கேரக்டர்களுக்கு சிறப்பாக உயிர் கொடுத்திருந்தனர் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன்.

விமர்சனரீதியான வரவேற்பு

விமர்சனரீதியான வரவேற்பு

இந்தப் படம் விமர்சனரீதியாக மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தை பாலிவுட்டிலும் இயக்கி முடித்துள்ளனர் புஷ்கர் -காயத்ரி. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சாயிப் அலிகான் நடிப்பில் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வெளியான சில மணிநேரங்களில் யூடியூபில் ட்ரெண்டிங்கில் காணப்பட்டது இந்த டீசர்.

செப்டம்பர் 30ல் ரிலீஸ்

செப்டம்பர் 30ல் ரிலீஸ்

செப்டம்பர் 30ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது படங்களில் எப்போதும் இரண்டு ஹீரோக்களை மையப்படுத்தி இவர்கள் படமெடுத்து வரும் நிலையில் இவர்களது சமீபத்திய பேட்டியில் இதேபோல ரஜினி -கமல் அல்லது விஜய் -அஜித்தை வைத்து படம் இயக்குவார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

விஜய் -அஜித்தை இயக்க விருப்பம்

விஜய் -அஜித்தை இயக்க விருப்பம்

இதற்கு பதிலளித்த புஷ்கர் -காயத்ரி, இதை கேட்கவே மிகுந்த ஆசையாக உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இதை செட் செய்ய முடியாது என்றும் தானாகவே அமைய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதுபோன்ற வாய்ப்பு அமைந்தால் அதை செய்துவிட்டு ரிரையர்ட் ஆகிவிடலாம் என்றும் அதன்பின்பு செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X