twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்போவே அதை செஞ்சிருந்தா.. இப்போது இதை செய்திருக்க வேண்டாம்.. மோடி யோசனையால் கடுப்பான இயக்குநர்!

    |

    சென்னை: வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பதற்கு சில திரைத்துறை பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    உலகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் மரணமடைந்துள்ளனர்.

    கைகளை தட்ட

    கைகளை தட்ட

    கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கடந்த மாதம் ஒரு நாள் மக்கள் ஊரடங்குக்கு கோரிக்கை விடுத்திருந்தார் மோடி. அப்போது மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் தங்களின் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க கைகளை தட்டுமாறு கூறினார்.

    மோடி வீடியோ

    மோடி வீடியோ

    இதனை தொடந்து 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி வீடியோ மெஸேஜ் ஒன்றை வெளியிட்டார். அதில் ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி கூறினார். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றது என்ற பிரதமர் மோடி இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றார்.

    விளக்கேற்ற வேண்டும்

    விளக்கேற்ற வேண்டும்

    மேலும் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது என்றும் பிரதமர் மோடி கூடினார்.

    என்னென்ன யோசனைகள்

    பிரதமர் மோடியின் இந்த யோசனைக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாக எழுந்துள்ளது. சில திரைப் பிரபலங்கள் பிரதமர் மோடியின் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    இதுதொடர்பாக பதிவிட்டுள்ள இயக்குநர் தங்கர்பச்சான், 9 நிமிடங்கள் என்ன;இனி விளக்கே இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம்! மூன்று மாதங்களுக்கு முன்பே விமான நிலையங்களை மூடியிருந்தால் 130 கோடி மக்களையும் இப்படி வீட்டில் போட்டு மூடியிருக்க வேண்டாம்!
    மணி அடிக்க வைத்தார்கள்!இப்போது விளக்கு ஏற்ற வேண்டுமாம்!அடுத்ததாக என்னென்ன யோசனைகள் வரப்போகிறதோ! என்று கூறியிருக்கிறார்.

    பயமாகதான் இருக்கிறது

    இதேபோல் ஆடை படத்தின் இயக்குநரான ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது.. என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Directors Ratnakumar and Thangar bachan tweets on PM Modi's today video message.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X