Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தனுஷ் பிறந்தநாள்..ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வாழ்த்துச் சொன்ன ’தி கிரே மேன்’ டீம் ரூசோ பிரதர்ஸ்
சென்னை : நடிகர் தனுஷ் நேற்றைய தினம் தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி அவருக்கு திரைத்துறையினர் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
ஆனாலும் அவர் தனது பிறந்தநாளில் எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடாமல், தன்னுடைய நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படம் நெட்பிளிக்சில் வெளியானது. அவரது கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
காலை மடக்கி ஈசியா நடிச்சிடலாம்.. பிரபுதேவாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. பொய்க்கால் குதிரை சஸ்பென்ஸ்!

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படம்மூலம் கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை தந்தார். பள்ளி மாணவர்கள் குறித்த அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷெரின் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான நேரத்தில் நடிகர் தனுஷின் உருவம் கேலிக்குள்ளானது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது ஸ்டைல் ஐகானாகியுள்ளார்.

எல்லைகளை விரிவுப்படுத்தும் தனுஷ்
தமிழில் மட்டுமில்லாமல், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பின் எல்லைகளை விரிவுப்படுத்தியுள்ளார் தனுஷ். அவரது நடிப்பில் சமீபத்தில் தி க்ரே மேன் ஹாலிவுட் படம் ஓடிடியில் வெளியானது. இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் தனுஷ்.

இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள்
அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், தனுஷின் நடிப்பு தங்களை மட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவரையும் கவர்ந்துள்ளதாகவும் தங்களது அடுத்த படத்திலும் அவர் இணைவார் என்றும் அவர்கள் படத்தின் பிரமோஷனின்போது தெரிவித்தனர். இது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

திரையரங்க ரிலீஸ்
அவரது ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தற்போது தி க்ரே மேன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் அடுத்த மாதத்தில் அவரது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் பிறந்தநாள்
இதனிடையே நேற்றைய தினம் தனுஷ் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவரது நானே வருவேன் மற்றும் வாத்தி படங்களின் போஸ்டர்கள் மற்றும் வாத்தி படத்தின் டீசர் ஆகியவை வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனுஷின் பிறந்தநாளையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்கள்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

ரூசோ சகோதரர்கள் வாழ்த்து
இதனிடையே அவரது தி க்ரே மேன் படத்தின் இயக்குநர்களான ரூசோ சகோதரர்களும் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்துள்ளனர். தங்களது செக்ஸி தமிழ் ப்ரெண்ட் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் பிரமோஷனின்போது ரூசோ சகோதரர்களுடன் இணைந்து படம் செய்தது எளிதாக இருந்ததாக தனுஷ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.