அடுத்த சிவகார்த்திகேயன்.. வெற்றிமாறனே சொல்லிட்டாரு.. ஜி.வி. பிரகாஷ் மேடையில் கேபிஒய் பாலா மாஸ்!
சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். விஜய் டிவியில் இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக மாறி உள்ளார்.
இந்நிலையில் அவரைப் போலவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான கேபிஒய் பாலா சிவகார்த்திகேயன் என பிரபல இயக்குநர் பாராட்டியது பாலாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நிகழ்ச்சி: ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த வாரம் வெளியான ரெபல் திரைப்படம் சிறப்பாக போகவில்லை. கடுமையான விமர்சனங்கள் அந்த படத்திற்கு குவிந்து வருகின்றன. அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த நிகழ்ச்சியை கலக்கப் போவது யாரு பிரபலம் பாலா தொகுத்து வழங்கினார். ஜிவி பிரகாஷ் நிகழ்ச்சி பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது என அவரை மேடையில் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெற்றிமாறன் பாராட்டு: பாலா ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல நல்ல நடிகரும் கூட நிச்சயம் அவர் அதற்காக முயற்சி செய்தால் நல்ல ஹீரோவாக சீக்கிரம் வருவார் என இயக்குநர் வெற்றிமாறன் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது பாலாவை பாராட்டினார். வெற்றிமாறன் சொல்வதைக் கேட்டு பாலாவின் கண்கள் கண்ணீர் சிந்திய காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
அடுத்த சிவகார்த்திகேயன்: அடுத்த தளபதியாக சிவகார்த்திகேயன் அப்கிரேட் ஆகி வரும் நிலையில் அடுத்த சிவகார்த்திகேயனுக்கு அழகான போட்டியே தற்போது எழுந்துள்ளது. ஒரு பக்கம் கவினை அடுத்த சிவகார்த்திகேயன் என ஏதோ சொல்லி ஒரு நிலையில் இயக்குநர் லிங்குசாமி, ஆரம்பத்தில் வழக்கு எண்18/9 படத்தின் சமயத்தில் காமெடி ரோல் கேட்டு சிவகார்த்திகேயன் வந்தார். அப்போது நீங்க ஹீரோ மெட்டீரியல் என்றேன். அப்போ இதே தன்னடக்கமாகத்தான் பேசினார். அதே தன்னடக்கம் உங்களிடமும் உள்ளது. நிச்சயம் நீங்களும் சிவகார்த்திகேயனை போல பெரிய ஹீரோவாக வருவீர்கள். இதை நான் சொல்லல வெற்றிமாறன் சாரே சொல்லி இருக்காரு என லிங்குசாமி பேசியதும் அவ்வளவு பெரிய இயக்குநர் தன்னை பாராட்டுவதை பார்த்து ஹேப்பி ஆகிவிட்டார் கேபிஒய் பாலா.
உதவி செய்யும் பாலா: தன்னிடம் கொஞ்சம் காசு சேர்ந்தாலும் அதை வைத்து அடுத்தவர்களுக்கு தேவையான உதவிகளை கேபிஒய் பாலா தொடர்ந்து செய்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென தனி ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் ஹீரோவாகி கலக்கும் போது பாலாவும் ஹீரோவாக மாறி விரைவில் தமிழ் சினிமா ரசிகர்களை என்டர்டெயின் செய்வார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என பல பிரபலங்களும் ஜி.வி. பிரகாஷ் கள்வன் பட மேடையை பாலாவின் புகழ் பாடும் மேடையாகவே மாற்றி உள்ளனர். யூடியூப் சேனலில் வெளியான கள்வன் பட இசை வெளியீட்டு விழா வீடியோக்கள் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











