»   »  இயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்

இயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர்கள் தன்னை நகைச்சுவை நடிகராகவே பார்க்க விரும்புவதாக மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர் மொட்டை ராஜேந்திரன். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது தான் ஒரு பெயர் கிடைத்துள்ளது. நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காமெடியாகட்டும், வில்லத்தனமாகட்டும் அசத்திவிடுவார்.

குணசித்திர வேடங்களிலும் ஜொலித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்.

கூப்பிடு ராஜேந்திரனை

கூப்பிடு ராஜேந்திரனை

காமெடியா, வில்லத்தனமா, குணச்சித்திர வேடமா கூப்பிடு நம்ம மொட்டை ராஜேந்திரனை என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.

ரெமோ

ரெமோ

சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வரும் ரெமோ படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரெமோ ஒரு சுவாரஸ்யமான படம். அதில் நான் சிறு வேடத்தில் வருகிறேன் என்றார்.

சிம்பு படம்

சிம்பு படம்

சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நகைச்சுவை நடிகராக வருகிறேன். இயக்குனர்கள் என்னை காமெடியனாக பார்க்கவே விரும்புகிறார்கள் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வில்லன்

வில்லன்

நான் என் திரை பயணத்தை வில்லன் கதாபாத்திரங்களில் துவங்கினாலும் நான் தற்போது காமெடியன் ஆகிவிட்டேன். இது எனக்கு பிடித்துள்ளது என்று மனம் திறந்துள்ளார் ராஜேந்திரன்.

English summary
Actor Mottai Rajendran said that directors want to see him as a comedian.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil