Maniratnam: தக் லைஃப் படத்துக்கு அப்புறம் மணிரத்னத்தோட பிளான் என்ன தெரியுமா?.. வேற லெவல்ல இருக்கே!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இயங்கி வருகிறார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்களான கார்த்தி, ரவி மோகன் உள்ளிட்டவர்களுடனும் இணைந்து செயல்பட்டுள்ளார்.
நாயகன் படத்திற்கு பிறகு 34 ஆண்டுகளை கடந்து நடிகர் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார் மணிரத்னம். கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் வரும் ஜுன் மாதம் 5ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம்: இயக்குநர் மணிரத்னம் தமிழ் சினிமாவின் சிறப்பான ஆளுமையாக, முன்னணி இயக்குநராக பல ஆண்டுகளை கடந்து தன்னை சிறப்பாக நிலை நிறுத்தியுள்ளார். தன்னுடைய படங்களில் அழகான காதலை மட்டுமில்லாமல் சமூக அவலங்களையும் சிறப்பாக கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். இதேபோல தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ள கார்த்தி, ரவி மோகன், விக்ரம், திரிஷா உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் வைத்து தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை ரிலீஸ் செய்து சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார்.
தக் லைஃப் படம்: இந்தப் படங்களின் அதீதமான வரவேற்பை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, வையாபுரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தக் லைஃப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் வரும் ஜுன் மாதம் 5ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. படத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் மணிரத்னம்.
மணிரத்னம் அடுத்தப்படம்: தக் லைஃப் படத்தின் பிரமோஷன்கள் விரைவில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு ஏஐ தொழிலுநுட்பம் குறித்து கற்பதற்காக சென்றிருந்த கமல்ஹாசனும் சென்னை திரும்பியுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே மணிரத்னத்தின் அடுத்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம்வந்துக் கொண்டிருக்கின்றன. அடுத்ததாக ரஜினிகாந்துடன் அவர் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் முன்னதாக காதல் கதையொன்றில் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
காதல் படத்தை இயக்கும் மணிரத்னம்: இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் மணிரத்னம் இணைந்து படமியக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காதலை மையமாக வைத்து இந்தப் படத்தை அவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தக் லைஃப் படத்தின் ரிலீசுக்கு பின்பு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக நவீன் பொலிஷெட்டி காணப்படுகிறார். தெலுங்கில் ஜதி ரத்னலு, ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியான படங்கள் வசூலில் மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











