பரமசிவன் பாத்திமா மாதிரி படங்களுக்கு ஆதரவு கொடுங்க.. விமல் படத்துக்காக வீடியோ வெளியிட்ட மோகன் ஜி!

சென்னை: இயக்குநர் மோகன் ஜி தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சையான இயக்குநர். இவரது படங்களில் இடம்பெறும் கருத்துக்கள் பெரும்பாலும் சமூகதளத்தில் சர்ச்சையை கிளப்பியது, இவர் தற்போது திரௌபதி 2 படத்தின் பணிகளில் உள்ளார். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இன்று அதாவது ஜூன் 6ஆம் தேதி வெளியாகியுள்ள படமான பரமசிவன் பாத்திமா படத்திற்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது வீடியோவைப் பார்த்த பரமசிவன் பாத்திமா படத்தின் இயக்குநர் இசக்கி நன்றி தெரிவித்துள்ளார்.

பரமசிவன் பாத்திமா படத்தை இயக்குநர் இசக்கி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விமல், எம்.எஸ் பாஸ்கர். சாயாதேவி, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீது தனி கவனம் ஏற்பட்டது. காரணம் படம் மதமாற்றம் குறித்து பேசுகிறது. இந்தியாவில் மதமாற்றம் தவறு கிடையாது. ஆனால் கட்டாய மதமாற்றம் என்பது கூடாது என்பதால், படம் மதமாற்றம் குறித்து பேசுகிறதா? அல்லது கட்டாய மதமாற்றம் குறித்து பேசுகிறதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் மதமாற்றம் என்ற விஷயத்தை எவ்வாறு கையாளுகிறது என்பது தெரிந்துவிடும்.

Diredctor Mohan G X Page Post Video To Support Vemal Paramasivan Fathima Movie
Photo Credit:

மோகன் ஜி: இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், " பரமசிவன் பாத்திமா படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை நண்பர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். தமிழர்கள் மீது பற்று கொண்ட மனிதர், அவர் ஒரு படம் இயக்கியுள்ளார். அந்த படம் எப்படி இருக்கும், அதில் என்ன மாதிரியான கருத்துகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலர் பார்த்தேன் நன்றாக உள்ளது. படத்தை இன்னும் பார்க்கவில்லை, திரௌபதி 2 படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறேன்.

தெறிக்கும் வசனங்கள்: மிகப்பெரிய விஷயத்தை இந்த படத்தின் மூலம் பேசியுள்ளார்கள். இந்த மண்ணுக்கானவர்கள் யார், தமிழ்நாட்டின் பூர்வமக்கள் யார் என்பதை ஹாரர் ஃபீலிங்கில் இந்த படத்தை எடுத்துள்ளார்கள். நேற்று நான் ஸ்னீக் பீக் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உண்மையான வசனங்கள் உள்ளது. எம்.எஸ். பாஸ்கர் சார் பேசுகிற வசனங்கள் எல்லாம் தெறிக்கிறது போல உள்ளது. சுப்பரமணிபுரமாக இருக்கும் ஊர் எப்படி யாக்கூப் புரமாக மாற்றுகிறார்கள் என்பதை படம் பேசுகிறது.

Diredctor Mohan G X Page Post Video To Support Vemal Paramasivan Fathima Movie
Photo Credit:

விமல்: மதமாற்றங்கள் இங்கு எப்படி நடக்கிறது என்பதை போகிற போக்கில் சொல்லிவிட்டார்கள். விமல் சார் சிறப்பாக உள்ளார். இதுபோன்ற கதை, திரைக்கதை கொண்ட படங்களில் நடிக்க மனமார்ந்த வாழ்த்துகள். இந்த படம் பெரும் வெற்றிப் படமாக மாற படக்குழுவினருக்கு வாழ்த்துகள். மக்கள் இது போன்ற படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அது அவர்களுக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும்" என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது வீடியோவைப் பார்த்த இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, " இயக்குனரை எனக்கு நேரடி பழக்கம் என எதுவும் கிடையாது ஒரு இயக்குனராக அறிவேன். அப்படியிருக்க தானாக வந்து 'பரமசிவன் பாத்திமா படத்தை ஆதரித்த இயக்குனர் சகோதரர் மோகன் ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X