வெற்றிமாறன் படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்... ரசிகர்களுக்கு இனிப்பான கொண்டாட்டம்
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் சிறப்பான வெற்றியையும் விமர்சனரீதியாக பாராட்டுக்களையும் பெற்றது.
தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
இந்தப் படத்தில் தற்போது பிரபல இயக்குநர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பான கதைக்களங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி சிறப்பான இயக்குநராக இந்திய அளவில் பேசப்படுகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

அடுத்தடுத்த படங்களில் பிசி
வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த பிராஜக்ட்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் வெற்றிமாறன். பாவக்கதைகள் ஆந்தாலஜியிலும் ஒரு கதையை இயக்கியிருந்தார்.

சூர்யா நடிப்பில் வாடிவாசல்
சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிகாரம் என்ற படத்தையும் இயக்கவுள்ளார். மேலும் இவரது தயாரிப்பில் ஆன்ட்ரியா நடிக்கவுள்ள படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கவுள்ளது.

விடுதலை படம்
இந்நிலையில் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் விடுதலை என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறுமலையில் நடைபெற்ற சூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் தற்போது திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

விடுதலை படத்தில் கௌதம் மேனன்
இந்நிலையில் இந்தப் படத்தில் தற்போது புதிய வரவாக இயக்குநர் கௌதம் மேனன் இணைந்துள்ளார். அவர் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கௌதம் மேனன் சிறப்பான இயக்குநராக பல படங்களை இயக்கியுள்ள நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது.

கௌதம் மேனன் நடிப்பில் கவனம்
வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் மிகச்சிறந்த இயக்குநர்களாக போற்றப்பட்டு வருகின்றனர். இந்நலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளார். கௌதம் மேனன் சமீப காலங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சிறப்பாக அமைந்தது. இதிலும் இவர் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











