ஒரேயொரு நைட் ஷோ... மகனை நினைத்து விழா மேடையில் ஃபீல் செய்த பி.வாசு
யாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில், தன் மகனை நினைத்து இயக்குனர் பி.வாசு வேதனைபட்டார்.
Recommended Video

சென்னை: தன் மகன் சக்தியின் படம் ஒரேயொரு நைட் ஷோ மட்டுமே வெளியானதாக, யாளி பட விழாவில் இயக்குனர் பி.வாசு வேதனை தெரிவித்தார்.
'கலாபக் காதலன்' படத்தில் ஆர்யாவை ஒருதலையாக காதலிக்கும் மச்சினி வேடத்தில் நடித்தவர் அக்ஷயா. ஒரு சில படங்களில் ஹீரேயினாகவும் நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்ஷயா தனது கணவர் பாலச்சந்தரின் எ.பி.கிரியேஷன்ஸ் சார்பியில் உருவாகும் 'யாளி' என்ற படத்தை இயக்கி இருப்பதுடன், படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக தமன் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, அர்ஜுன் என்ற புதுமுகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

யாளி பட பர்ஸ்ட் லுக்
யாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பி.வாசு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டார்.

அதிர்ச்சி அடைந்த பி.வாசு
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பி.வாசு, "சினிமாவில் தற்போது நடந்து முடிந்த போராட்டத்தினால் சிறிய முதலீட்டு படங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. சின்ன படங்களுக்கு பொதுவாக திரையரங்கங்கள் கிடைப்பதில் நிறைய சிரமங்கள் இருக்கும். என் மகன் சக்தி நடித்த ஒரு படத்திற்கு நைட் ஷோ மட்டுமே கிடைத்தது. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

ஸ்டிரைக் முடிந்ததால் தீர்வு
இந்த சூழல் நீடித்தால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் யோசித்தது உண்டு. கஷ்டப்பட்டு எடுத்த படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்கவில்லை என்றால் அந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று யோசித்து பாருங்கள். ஆனால், தற்போது நடந்து முடிந்த சினிமா ஸ்டிரைக் அந்த நிலையை மாற்றியிருக்கிறது.

பர்ஸ்ட் லுக் முறைக்கு பாராட்டு
நான் உழைப்பாளி எடுத்தபோதெல்லாம் ஃபர்ஸ்ட் லுக் என்ற விஷயம் இல்லை. சந்திரமுகி படத்தில் ரஜினியின் வேட்டையன் கெட்டப்பை கூட ரொம்ப சாதாரணமாகத்தான் வெளியிட்டேன். ஆனால், தற்போது படத்தின் போஸ்டர் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் சிறப்பான முறையில் வெளியீட்டு அதன் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

யாளி தலைப்பே பெரும் பலம்
அதேபோல், புதிதாக வரும் இளைஞர்கள் நல்ல சிந்தனையுடன், வித்தியாசமான கதைகளுடன் வருகிறார்கள். 'யாளி' என்ற தலைப்பே படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. நிச்சயம் இப்படத்தை வித்தியாசமான கதையோடு அக்ஷயா இயக்கியிருப்பார், என்று நம்புகிறேன். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications











