கூலி ஓர்க்கவுட் ஆகல.. லோகேஷ் ஏமாற்றிவிட்டார்.. கூலி படம் எப்படி இருக்கு.. கேரள மக்கள் விமர்சனம்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், பாலிவுட் நடிகர், ஆமிர்கான், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உபேந்திரா, தெலுங்கு உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா, மலையாள நடிகர் சோபின் சாஹிர், ஷ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்த இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படத்தை பார்த்த கேரள மக்கள் தங்கள் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர், கூலி படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை விக்ரம் படம் போல இருக்கு என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த அளவிற்கு படம் இல்லை. சாதாரண திரைப்படம் போல தான் இருக்கிறது. படத்தில் ரஜினி நன்றாக நடித்திருக்கிறார். இருந்தாலும் படம் நார்மல் படம் போலதான் இருக்கிறது. படத்திற்கும் கதைக்கும் எந்தவிதமான தொடர்புமும் இல்லாதது போல இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படம் போலவே இல்லை, மனதிற்கு ஒரு திருப்தி ஏற்பட இல்லை. முதல்பாதி சுத்தமாக சரி இல்லை, இரண்டாவது பாதியில் ஓரளவுக்கு கதை ஒத்துப்போகிறது. ஆனால், படத்தில் பல இடங்களில் ஏதோ மிஸ் ஆனது போல தெரிகிறது என்றார்.

லோகேஷ் கனகராஜ் ஏமாற்றிவிட்டார்: அதே படம் பார்த்த மற்றொரு ரசிகர், லோகேஷ் கனகராஜ் ரஜினியை வெச்சு செய்துவிட்டார். தான் ஒரு கமல் ரசிகன் என்பதை நிரூபித்து விட்டார். கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜன் படம் போலவே இல்லை. கடைசியில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும் போது இது லோகேஷின் படமாக என கேட்கத் தோன்றுகிறது. கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள், நான் கேட்டேனா என்று பேசி இருந்தாரு, அதே போல படம் பார்க்கும் அனைவரையும் கேட்க வைத்துவிட்டார். ரஜினிகாந்த் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், லோகேஷ் கனகராஜின் படம் ன்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யக்கூடிய வகையில் படத்தின் கதைக்களம் இல்லை. தனது நண்பனை யார் கொன்றார்களோ அவரை தேடி பழித்திருக்கும் கதை என சாதாரண கதை போல தான் இருக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றார்.
ஒர்க்கவுட் ஆகல: விக்ரம் படத்தை போல் கூலி படத்தில் கேமியோ கதாபாத்திரங்கள் வொர்க் அவுட் ஆகவில்லை, அனிருத் பிஜிஎம் இல்லைனா படமே இல்லை ஒன்னுமே இல்லை, படத்திற்கு பலமே அனிருத்தின் இசை, மோனிகா பாடல் ரசிக்கும் படி இருந்தது என படம் பார்த்தவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். கூலி படத்தை பார்க்க நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் ரோகிணி திரையரங்கிற்கு வந்து படம் பார்த்தார். அதே தியேட்டரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் படம் பார்க்க வந்தார்.


Click it and Unblock the Notifications











