கணவரின் மரணம் என்னை பைத்தியமாக்கியது.. குடிக்கு அடிமையானேன்.. டிஸ்கோ சாந்தி வேதனை!
சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போட்ட நடிகை டிஸ்கோ சாந்தி. தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர் இறந்த பிறகு குடிக்கு அடிமையாக இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஐட்டம் பாடலுக்கு பெயர் போன நடிகை டிஸ்கோ சாந்தி, பிரபல பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகள் ஆவார். இவர் இறந்த பிறகு, வறுமையால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட நிலையில், குடும்பத்தை காப்பாற்ற 7 வயதில் சினிமாவில் நடித்தார். துவக்கத்தில் நாயகியாக நடித்து வந்த இவர்,அது கைக்கொடுக்காத நிலையில், ஐட்டம் பாடல்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. பின் காலத்தில் அதையே தன்னுடைய கேரியராக மாற்றிக்கொண்டார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தி: இவர் 1996ம் ஆண்டி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து விலகி குடும்பத்தோடு செட்டில் ஆனார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஸ்ரீஹரி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய கணவர் மீது உள்ள காதலால் தான் வீட்டை விட்டு அதிகமாக வெளியில் வருவதில்லை என்று டிஸ்கோ சாந்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தினமும் குடி: தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் டிஸ்கோ சாந்தி, தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். என் கணவரின் மறைவு என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. படுத்தால் தூக்கமே வராது இதனால், தினமும் குடித்துவிட்டுத்தான் தூங்குவேன். என் கணவர் உயிரோடு இருக்கும் போது, இருவரும் சேர்ந்து பிறந்த நாள், பார்ட்டி என்றால் குடிப்போம். ஆனால், அவர் உயிரோடு இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
உடல்நிலை மோசமாகிவிட்டது: காலையில் எழுந்து ஏதாவது சின்னசின்ன வேலை செய்வேன், பின் மீண்டும் குடித்துவிட்டு தூங்கிவிடுவேன். இப்படியே குடித்து குடித்து என் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இப்படியே குடித்துக்கொண்டு இருந்தால், இவர்களின் நிலைமை மோசமாகிவிடும் என்று சொல்லிவிட்டார். இதையடுத்து, என் இரண்டு மகன்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள். அப்பாவும் இல்லை, நீயும் போய்விட்டால் எங்களுக்கு என்று யார் இருக்கிறார் என்று அழுதார்கள் அதன் பிறகு தான் குடிப்பதை நிறுத்தினேன்.
அவர்கள், குடிக்கக்கூடாது என்று என்னை திட்டி இருந்தால், சண்டை போட்டு இருந்தால் நான் குடிப்பதை நிறுத்தி இருக்க மாட்டேன். ஆனால், அவர்கள் அழுதது என் மனதை மாற்றிவிட்டது. அன்றில் இருந்து குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று டிஸ்கோ சாந்தி அந்த பேட்டியில் பேசி உள்ளார். தான் நடிக்க வந்ததாக நடிகை டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார். துவக்கத்தில் நாயகியாக நடித்த படங்கள் கைக்கொடுக்காத நிலையில், ஐட்டம் பாடல்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. அதையே தன்னுடைய கேரியராக மாற்றிக் கொண்டார் சாந்தி. கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல பாடல்களுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
டிஸ்கோ சாந்தி -ஸ்ரீஹரி திருமணம்: கடந்த 1985 முதல் 1996 வரையிலான காலகட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஒரியா உள்ளிட்ட மொழிகளில் இவர் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











