twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேச்சிகள் அழகா, தமிழ் பொண்ணுங்க அழகான்னு விவாதிப்பது தவறா?: நீயா நானா இயக்குனர்

    By Siva
    |

    சென்னை: பெண்களின் அழகு குறித்து விவாதிப்பது தவறா என்று நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கேரளத்து பெண்கள் அழகா? தமிழ்நாட்டு பெண்கள் அழகா? என்ற தலைப்பில் விவாதம் நடக்கவிருந்தது.

    நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பார்த்து பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புகார்

    புகார்

    நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அழகு விவாத நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சொந்த வீடு வாங்கலாமா, வேண்டாமா என்ற பழைய நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.

    அழகு

    அழகு

    கல்லூரிகளுக்கு சென்றபோது அதிலும் குறிப்பாக ஜிமிக்கி கம்மல் வீடியோ வைரலான பிறகு மாணவ, மாணவியர் பெண்களின் அழகு பற்றி பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதனால் அழகு குறித்து விவாதிக்க நினைத்தோம் என்று நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    விவாதம்

    விவாதம்

    பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகள் 40 வயதை கடந்தவர்களுக்காக உள்ளது. பருவ வயதுள்ளவர்களுக்கு ஏற்றவாறும் எங்கள் நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்கிறார் ஆண்டனி.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    நிகழ்ச்சியை பார்த்துவிட்டு குற்றம் சாட்டியிருந்தால் பரவாயில்லை. ஆனால் நிகழ்ச்சியை பார்க்காமலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று ஆண்டனி தெரிவித்துள்ளார்.

    பெண்கள்

    பெண்கள்

    அழகை பற்றி தத்துவார்த்த ரீதியாக பேசக் கூடாதா, விவாதிக்கக் கூடாதா? நாங்கள் இதுவரை பெண்களுக்கு எதிராக ஏதாவது தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோமா என்று கேட்கிறார் ஆண்டனி.

    English summary
    Neeya Naana director Antony asked is it wrong to discuss about women's beauty in a TV programme.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X