சூர்யா ஜோடி திஷா பதானி யாருடன் ஜோடி போட்டு சுத்துறாரு பாருங்க.. கொடுத்து வச்ச ஜாக்சன் வாங்!
மும்பை: ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ராப் இசை பாடகரான ஜாக்சன் வாங் முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில், பாலிவுட் நடிகை திஷா பதானி உடன் ஊரை சுற்றி பார்த்துள்ள வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சூர்யாவின் 42வது படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பாலிவுட்டின் பிகினி ராணி திஷா பதானி உடன் ஜாக்சன் வாங் ஜாலியாக டூர் அடித்த நிலையில், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனையும் சந்தித்து சென்றுள்ளார்.
ஹாஷ்டேக் திஷா பதானியை டிரெண்ட் செய்து பாலிவுட் ரசிகர்கள் ஜாக்சன் வாங் உடன் அவர் மும்பையில் சுற்றித் திரிந்த வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

யார் இந்த ஜாக்சன் வாங்
GOT7 மூலம் உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ராப் இசை பாடகர் ஜாக்சன் வாங். கம் அலைவ், 100 வேஸ் உள்ளிட்ட ஆல்பங்களை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், முதன்முறையாக இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்துள்ள அவரை நடிகை திஷா பதானி ஊரை சுற்றி காட்டி உள்ள வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
ஊரை சுற்றி காட்டும் திஷா பதானி
பாலிவுட்டின் பிகினி பாம் ஷெல் ஆன திஷா பதானி டைகர் ஷெராஃபை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சமீப காலமாக அலெக்ஸாண்டர் எனும் மாடல் நடிகருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். இந்நிலையில், ராப் இசை பாடகரான ஜாக்சன் வாங்குடன் மும்பை நகரையே ஓப்பன் மோட்டார் வண்டியில் சுற்றிக் காட்டிய வீடியோக்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

தெறிக்கும் டிரெண்டிங்
சர்வதேச பாடகரான 28 வயது ஜாக்சன் வாங் உடன் நடிகை திஷா பதானி மும்பை விமான நிலையம், கேட் வே ஆஃப் இந்தியா உள்ளிட்ட பகுதிகளை சுற்றிக் காட்டி உள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இருவரும் செம ஜாலியாக ஓபன் வண்டியில் சுற்றித் திரிந்ததை பார்த்த ரசிகர்களும் அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சூர்யா ஜோடி
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை திஷா பதானி. பாலிவுட் நடிகையான திஷா பதானியின் முதல் கோலிவுட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் ஜோடி தற்போது ஹாங்காங் பாடகருடன் இப்படி ஜோடி போட்டு சுற்றுகிறாரே என்ன விஷயம் என பாலிவுட்டில் பெரும் புகைச்சலாக உள்ளது.

ஹ்ரித்திக் ரோஷனை சந்தித்து
இந்தியா வந்துள்ள ஜாக்சன் வாங் திஷா பதானி உடன் ஊரை சுற்றிப் பார்த்த நிலையில், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனையும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், சில பாலிவுட் பிரபலங்களையும் ஜாக்சன் வாங் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











