கணவரை கழட்டிவிட்டு கங்குவா நடிகையுடன் சுற்றும் நாகினி நடிகை.. பீச் பியூட்டி ஓவர் டோஸா இருக்கே!

மும்பை: கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாகினி சீரியல் மூலம் பிரபலமான மெளனி ராய் மற்றும் டைகர் ஷெர்ஃபின் சகோதரி கிருஷ்ணா ஷ்ராஃப் உடன் டிசம்பர் ஹாலிடேவை தீவு ஒன்றில் கொண்டாடி வருகிறார். மூன்று பேரும் பீச் பேபிகளாக மாறி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக அதிகரித்து வருகின்றன.

எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியாக மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். அவருடைய முன்னாள் காதலியாக திஷா பதானி அந்த படத்தில் நடித்திருந்தார். இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள திஷா பதானி கவர்ச்சி புயலாகவே வலம் வருகிறார்.

disha patani mouni roy heroine

டைகர் ஷெராஃப்பை காதலித்து வருகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், மைக்கேல் என்பவர் திஷா பதானியின் போட்டோவை பச்சைக் குத்திக் கொண்ட நிலையில், அவரை காதலிப்பதாக ரூமர்கள் கிளம்பின. இதுவரை திஷா பதானி தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பீச் பேபி: கங்குவா படத்திலேயே 3டியில் முதல் பாடலில் திஷா பதானி வந்த காட்சிகள் தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் திரும்ப திரும்ப ரசிகர்கள் அந்த யோலோ பாடலைத் தான் ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர். படத்திலேயே பெரிதாக யாரும் கத்தாமல் காதுகளுக்கும் கண்களுக்கும் இனிமையாக இருப்பது அந்த முதல் பாடல் தான் என்கின்றனர்.

disha patani mouni roy heroine

2 பெரிய படங்கள்: இந்த ஆண்டு கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த திஷா பதானிக்கு அடுத்த பெரிய படமாக கங்குவா படம் அமைந்தாலும், மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா மாறியது நடிகையை கடுப்பாக்கி விட்டது. கோலிவுட்டில் மற்ற எந்த பெரிய நடிகர்களும் திஷா பதானியா அய்யோ வேண்டாம் என்கிற நிலையில் தான் தற்போது உள்ளதாக கூறுகின்றனர்.

disha patani mouni roy heroine

நீச்சல் உடையில் 3 மெர்மெயிட்கள்: கடலில் இருந்து அப்படியே கடல்கன்னிகள் இறங்கி வந்துவிட்டதா என திஷா பதானி, மெளனி ராய் மற்றும் கிருஷ்ணா ஷெராஃப்பை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இயர் எண்ட் விடுமுறையை கொண்டாட இப்பவே மூவரும் சேர்ந்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்டனர்.

disha patani mouni roy heroine

கணவரை கழட்டிவிட்டு: இதில், மெளனி ராய்க்கு திருமணம் ஆனதே மறந்து போய்விட்டதா என்றும் கணவருடனே பார்க்க முடியவில்லை. எப்போதுமே திஷா பதானியுடன் கேர்ள்ஸ் பார்ட்டியிலேயே இருக்காரே என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு சுராஜ் நம்பியார் எனும் தொழிலதிபரை மெளனி ராய் கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார். அடிக்கடி திஷா பதானியுடன் அவர் வெளிநாடுகளுக்கு சென்று வருவதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X