அப்பாடா.. ஒருவழியா பீச்சுக்கு வந்துட்டேன்.. திஷா பதானியின் பிகினி போஸ்.. களைகட்டும் கமெண்ட்ஸ்!

மும்பை: தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள 4.0 ஊரடங்கால் பிரபலங்கள் பலரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.

Recommended Video

163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே.. திஷா பட்டானி உடற்பயிற்சி - வீடியோ

தோனியின் பயோபிக் திரைப்படத்தில் காதலியாக நடித்து பிரபலமான பாலிவுட் நடிகை திஷா பதானி தற்போது கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான மலங் திரைப்படத்தில் திஷா பதானி உச்சக்கட்ட கவர்ச்சி காட்டியும், ஆக்‌ஷனிலும் மிரட்டியிருப்பார்.

டாப் டிரெண்டிங்

டாப் டிரெண்டிங்

பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸில் சில நாட்களுக்கு முன்னதாக வெளியான திஷா பதானியின் மலங் திரைப்படம், நெட்பிளிக்ஸின் டாப் 10 டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. மோகித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர் நடிப்பில் அந்த படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பனானா மில்க் ஷேக்

பனானா மில்க் ஷேக்

கடந்த வாரம் நடிகை திஷா பதானி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகின. திஷாவின் கிராப் டாப்பில் Banana Milkshake என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததே அந்த புகைப்படங்கள் இணையத்தில் அந்த அளவுக்கு பரவ காரணமாக இருந்தது. ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் கமெண்ட் பக்கத்தில் குவிந்தன.

பிகினியுடன்

பிகினியுடன்

இந்நிலையில், இந்த வாரத்திற்கான புகைப்படமாக கடற்கரையில் பிகினியுடன் இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, இளைஞர்களின் இதய சூட்டை அதிகரித்துள்ளார். பூப்போட்ட அந்த பிகினியுடன் சன் கிளாஸ் போட்ட படி கடற்கரை மணலில் முட்டிப் போட்டு போஸ் கொடுத்துள்ளார். திஷாவின் இந்த தாராள போஸை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

சேலைக் கட்டி லூடோ விளையாட்டு

சேலைக் கட்டி லூடோ விளையாட்டு

திஷா பதானி பிகினி உடையில் படுகவர்ச்சியாக கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து பொறாமை பட்ட சில நெட்டிசன்கள், அவருக்கு போட்டோஷாப்பில் சேலைக் கட்டி லூடோ விளையாட்டு விளையாடுவது போலவும் மார்ஃபிங் செய்துள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்தில் நாட்டு மக்களிடையே லூடோ விளையாட்டு எந்தளவுக்கு பிரபலம் ஆகி இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமான சாட்சி.

சிரிப்பழகி

சிரிப்பழகி

பாலிவுட்டின் இளம் நடிகையாக வலம் வரும் திஷா பதானி, ஜாக்கின் சானுக்கே ஜோடியாக குங்ஃபூ யோகா படத்தில் நடித்துள்ளார். திஷா பதானி குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்திருந்தாலும், அந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகின்றன. செம அழகாக சிரிக்கும் அவரது சிரிப்பழகை ஒரு நாள் முழுவதும் கண்டு ரசிக்கலாம்.

இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கணும்

இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கணும்

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி நடிப்பில் உருவாகி வரும் ராதே திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ரிலீசாகி இருக்க வேண்டிய படம். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட லாக்டவுனால் அதன் ரிலீஸ் தள்ளி போனதால், பாலிவுட் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

சன் கிளாஸ்

சன் கிளாஸ்

திஷா பதானியின் பிகினியை பார்த்து இந்த ரசிகர் ஜொள்ளு விடவில்லை என்பதை தெளிவுப்படுத்த, நைஸ் சன் கிளாஸ் திஷா பதானி என கமெண்ட் செய்துள்ளார். சன் கிளாஸை பார்த்தியா இல்லை அந்த இடத்தை பார்த்தியான்னு எங்களுக்கு தெரியும் என மற்ற நெட்டிசன்கள் அவரை ஓட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X