சூர்யா பட ஹீரோயினா இது? வெள்ளை நிற பிகினியில் நெஞ்சை நிமிர்த்தி என்னவொரு போஸ்.. சூடான இணையம்!

சென்னை: பாலிவுட் நடிகை திஷா பதானி வெள்ளை நிற பிகினியில் கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படம் ஒட்டுமொத்த இணையத்தையே சூடாக்கி உள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தில் இவர் தான் ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், திஷா பதானியின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட சூர்யா ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

 வெள்ளை பிகினியில்

வெள்ளை பிகினியில்

எம்.எஸ். தோனி பயோபிக், மலங், சல்மான் கானின் ராதே உள்ளிட்ட பல படங்களில் நடித்த திஷா பதானி பாலிவுட்டின் ஹாட் கிளாம் டாலாக வலம் வருகிறார். அடிக்கடி உள்ளாடைகளுடன் போட்டோ போட்டு ரசிகர்களை சூடாக்கி விடுவார். இந்நிலையில், தற்போது வெள்ளை நிற பிகினி உடையில் பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளார்.

 ஜாக்கி சான் ஜோடி

ஜாக்கி சான் ஜோடி

சந்திரமுகி படத்தில் நடித்து முடித்து விட்டு விஜய்யின் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா கோடம்பாக்கம் ஏரியா பாடலில் நான் சூப்பர்ஸ்டார் ஜோடிடான்னு சொல்வார். அப்படி ஒரு பாடலை திஷா பதானிக்கு எழுதினால், நான் ஜாக்கி சானுக்கே ஜோடி என பாடுவார். குங்ஃபூ யோகா படத்தில் ஜாக்கி சானுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 சூர்யா 42 ஹீரோயின்

சூர்யா 42 ஹீரோயின்

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக களமிறங்கப் போகிறார் திஷா பதானி என வதந்திகள் கிளம்பி வந்த நிலையில், சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக இவர் ஒப்பந்தமாகி உள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் உறுதியான தகவலை அளித்துள்ளன. சூர்யா 42 படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவில் இவர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 கோவாவில் எடுத்ததா

கோவாவில் எடுத்ததா

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் கோவாவில் நடித்து வருகிறாரா திஷா பதானி, அந்த பீச்சில் எடுத்த போட்டோவா இது என்றும் சூர்யா 42 படத்தின் பாடல் காட்சியில் இப்படி ஒரு சீன் இருந்தால் படம் ஃபயரா இருக்குமே என சூர்யா ரசிகர்கள் ஹார்ட்டீன்களை போட்டு வருகின்றனர்.

 சூர்யா ரசிகர்கள் கமெண்ட்ஸ்

சூர்யா ரசிகர்கள் கமெண்ட்ஸ்

ஓ காட் வாட் எ உமன் என கமெண்ட் போட்டு சூர்யாவின் வாரணம் ஆயிரம் ஜிஃப் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர். சீக்கிரமே சூர்யாவுடன் உங்களை பிக் ஸ்க்ரீனில் பார்க்கணும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X