என் படங்களை பார்க்க எனக்கே பிடிக்காது...பகீர் கிளப்பிய பாலிவுட் பியூட்டி

மும்பை : பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திஷா பதானி. பாலிவுட் நடிகைகளிலேயே அழகானவர், அதிக ரசிகர்களைக் கொண்டவரும் இவர் தான் என சொல்லப்படுகிறது.

 Disha Patani doesnt like watching her own movies cause of this reason

திஷா பதானி சினிமாக்கள் மட்டுமல்ல, சோஷியல் மீடியாக்களில் வெளியிடும் கவர்ச்சி போட்டாடோக்களாலும் மிகவும் பிரபலம். சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

இவரது கவர்ச்சி போட்டோக்களை பார்க்க தனி கூட்டமே உண்டு. திஷா பதானிக்கு இன்ஸ்டாகிராமில் 52.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். பாலிவுட்டில் இந்த அளவிற்கு அதிக ஃபாலோவர்களை பெற்றிருக்கும் நடிகை இவர் ஒருவர் மட்டும் தான்.

தற்போது திஷா, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியின் போது மீடியாக்களை சந்தித்த திஷா பதானி, நான் நடித்த படங்களை திரையில் பார்க்க எனக்கு பிடிக்காது. எனது பெர்ஃபாமன்சை பார்த்து விட்டு அவர்களின் ரியாக்ஷனை பார்க்கவே கஷ்டமாக இருக்கும் என்றார். இதைக் கேட்டு அனைவரும் ஷாக்காகி விட்டனர்.

நீங்கள் உங்களை திரையில் பார்க்கும் போது எப்படி ஃபீல் பண்ணுவீர்கள் என்ற கேள்விக்கு தான் இப்படி ஒரு அதிர்ச்சி தகவலை திஷா பதானி அளித்துள்ளார். திஷா தனது பதிலில், என்னை திரையில் பார்க்க என்னாலேயே முடியாது. என்னை திரையில் பார்ப்பதை நான் வெறுக்கிறேன். என்னுடைய படங்களை நான் எப்போதெல்லாம் பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் கைகளால் முகத்தை மூடிக் கொள்வேன் என்றார்.

ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படத்தில் திஷா பதானியுடன் ஜான் ஆப்ரகாம், வாணி கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது வரை நடிக்காத ஒரு கேரக்டரில் தான் திஷா பதானி இந்த படத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து சித்தார்த் மல்கோத்ராவுடன் யோதா என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்க போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X