தலை கீழாகத்தான் குதிப்பேன்.. திஷா படானியின் செம பல்டி.. வைரலாகும் வீடியோ! எல்லாம் இதுக்குத்தானாம்!

மும்பை: பாலிவுட்டின் ஹாட் குயின் திஷா படானியின் பல்டி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 7ம் தேதி வெளியான மலங் படத்தில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக திஷா நடித்திருந்தார்.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில், விருப்பம் உள்ளவரான திஷா படானி, தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள பல்டி வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

டைகர் ஷெராஃப் ஆப்சென்ட்

பாலிவுட்டின் இளம் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை திஷா படானி, பிகினி மற்றும் ஹாட் புகைப்படங்களை சர்வ சாதாரணமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறார். நேற்று, இவர் கொண்டாடிய காதலர் தின பார்ட்டியில், நடிகர் டைகர் ஷெராஃப் ஏன் கலந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பீச்சில் மாடுகள்

ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர் உள்ளிட்ட மலங் படக்குழுவுடன் தனது காதலர் தினத்தை கொண்டாடினார் திஷா. அதனைத் தொடர்ந்து, கடற்கரையில், ஷார்ட் டிரெஸ் அணிந்து, மாடுகளை தடவிக் கொடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், பீச்சில் மாடுகளை முதன்முறையாக பார்க்கிறேன் என தனது ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

அந்தர் பல்டி

ஜிம் பிரியையான திஷா படானி, அசால்ட்டாக 180 கிலோ வெயிட்டை எல்லாம் புஷ் அப் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வைரலாக்கியவர். தற்போது, தலை கீழாகத்தான் குதிப்பேன் என்ற ரேஞ்சில் அவர் அடித்துள்ள அந்தர் பல்டி வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

7 லட்சம்

திஷா படானியின் இந்த பல்டி வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், எக்கச்சக்க ஹார்ட்டீன்களும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. பாலிவுட் நடிகைகள் பலரும் ஜிம்முக்கு சென்று தங்களின் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். ஆனால், திஷா அதில் பல புதிய முயற்சிகளை செய்து வருகிறார்.

செம சூப்பர்

மோகித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், திஷா படானி, அனில் கபூர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி வெளியான மலங் திரைப்படம், பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. பிகினி உடையில் செம கவர்ச்சி காட்டி திஷா படானி நடித்துள்ளார். மலங் படத்தில் உங்கள் நடிப்பு ஆஸம் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

ஹாலிவுட்டுக்கா

திஷா படானி இப்படி கடினமான உடற்பயிற்சிகளையும் வித்தியாசமான ஸ்டன்ட்டுகளையும் செய்து வருவது, ஹாலிவுட் படத்திற்கான முன்னேற்பாடா என பாலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜாக்கி சான் நடிப்பில் வெளியான குங்ஃபூ யோகா படத்தில் ஏற்கனவே திஷா படானி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான் படம்

சல்மான் கான் படம்

மலங் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்து வரும் திஷா படானி, அடுத்ததாக, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள ராதே படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்த படத்தில் வெறும் கவர்ச்சி ஹீரோயினாக மட்டும் வராமல், ஆக்‌ஷன் அவதாரத்தையும் திஷா எடுக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X