For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்படி இப்படி டான்ஸ் ஆடுறீங்க.. தென்னிந்திய நடிகரின் நடனத்தை பார்த்து வியந்த திஷா பதானி!

    |

    ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா பாடல் நடனத்தை பார்த்து அசந்து போயுள்ளார் பாலிவுட் நடிகை திஷா பதானி.

    163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே.. திஷா பட்டானி உடற்பயிற்சி - வீடியோ

    அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் திரிவிக்ரம் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அலா வைகுந்த புறமுலோ படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

    அந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் 91 மில்லியன் வியூஸ்களை கடந்து இந்தியளவில் வைரலானது.

    இது தெரியாம போயிடுச்சே.. மங்காத்தா செயினுக்கு பின்னால் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா?

    பாம்ஷெல்

    பாம்ஷெல்

    பாலிவுட்டின் பாம்ஷெல் நடிகையாக வலம் வரும் திஷா பதானி, நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான மலங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அந்த படத்தில், கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத அளவுக்கு நடிகை திஷா பதானி, எந்த அளவுக்கு தாராளம் காட்ட முடியுமோ, அந்த அளவுக்கு தாராளம் காட்டி நடித்திருந்தார்.

    உள்ளாடையுடன்

    உள்ளாடையுடன்

    படத்தில் மட்டுமின்றி, ரியலிலும், உள்ளாடை அணிந்து அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் போட்டோக்கள் போட்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். எப்போ பார்த்தாலும், கெல்வின் க்ளெய்ன் உள்ளாடைக்கு விளம்பரம் கொடுப்பது போலவே போஸ்ட் போடுறீங்க என்றும், நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

    புடிச்சு போன புட்ட பொம்மா

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்த புறமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு, எப்படி அப்படி டான்ஸ் ஆடுனிங்க, ரொம்ப ஆச்சர்யமா இருக்குன்னு, இந்த பாகி 2 பட நாயகி நேரடியாகவே அல்லு அர்ஜுனிடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    அசத்தல் பதில்

    அசத்தல் பதில்

    பாலிவுட்டின் இளம் நாயகி திஷா பதானி, கேட்ட கேள்விக்கு, ரொம்ப கூலாக, தனக்கு இசை ரொம்ப பிடிக்கும். அந்த பாடலின் இசை பிடித்து போனதன் காரணத்தினாலே அப்படியொரு நடனத்தை தான் ஆடியதாக அசத்தலாக பதிலளித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்த புறமுலோ படத்தை ரீமேக் செய்ய இந்தியிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

    அடுத்த படத்தில்

    அடுத்த படத்தில்

    டைகர் ஷெராஃபின் காதலி என அழைக்கப்பட்டு வரும் திஷா பதானி, இப்படி ஓப்பனாகவே அல்லு அர்ஜுனை புகழ்ந்துள்ள நிலையில், அவரது அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தட்டிப் பறிக்க அம்மணி திட்டம் இட்டுள்ளார் என்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அலர்ட் செய்கின்றனர். அப்படியொரு காம்போ அமைந்தாலும், செமையா இருக்கும் என்றும் பல ரசிகர்கள் கருதுகின்றனர்.

    English summary
    The latest to fawn over Allu Arjun’s dancing in Butta Bomma is Baaghi 2 actress Disha Patani.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X