வாரிசு நடிகரை ஆட்டிப்படைக்கும் சுந்தர் சி. ஹீரோயின்
Recommended Video

மும்பை: நடிகை திஷா பதானி தனது காதலரான நடிகர் டைகர் ஷ்ராபை ஆட்டிப்படைக்கிறாராம்.
பாலிவுட் நடிகை திஷா பதானி சுந்தர் சி.யின் சங்கமித்ரா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். திஷா பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வருகிறார்.
திஷாவின் அபார்ட்மென்ட்டில் அவருடன் வசிக்கிறார் டைகர். இது டைகரின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம்.

டைகர்
திஷா டைகரை ஓவராக ஆட்டிப்படைக்கிறாராம். அவரின் தாய் ஆயிஷா, நண்பர்களுடன் பேச விடுவது இல்லையாம். டைகரை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம் திஷா.

மாற்றம்
டைகருக்கு இது முதல் காதல் என்பதால் அவர் திஷா மீது பைத்தியமாக இருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் கேட்கிறார். டைகர் ரொம்பவே மாறிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர் தெரிவித்துள்ளார்.

பேச்சு
டைகர் அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் அளவாக அதுவும் செட்டில் இருக்கும்போது மட்டுமே பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம் திஷா. செட்டை விட்டு கிளம்பினால் எந்த நடிகையுடனும் பேசக் கூடாதாம்.

லைக்ஸ்
இன்ஸ்டாகிராமில் நடிகைகள் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டால் அதை லைக் செய்யக் கூடாது என்று டைகரிடம் கறாராக கூறியுள்ளாராம் திஷா. டைகர் எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்துக் கொண்டிருக்கிறாராம் திஷா.

பிடிக்கவில்லை
திஷா பதானி ஓவராக ஆடுவது டைகரின் அம்மா ஆயிஷாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். என் புள்ளைய என்னிடம் இருந்து பிரிக்கப் பார்க்கிறாளே என்று கடும் கோபத்தில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











