பிரபாஸ்-க்கு ஜோடியான பிகினி பேபி.. அப்போ தீபிகா படுகோன்? பிரம்மாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே!

ஹைதராபாத்: நடிகையர் திலகம் படத்தை இயக்கி தேசிய விருதை அள்ளிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக காத்திருக்கிறது பிரபாஸின் Project K.

ஏற்கனவே இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மற்றொரு இளம் பாலிவுட் நடிகை இணைந்துள்ளாராம்.

இவர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் நடிகை சாவித்ரியின் பயோபிக்காக வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிறப்பான நடிப்புக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றார். அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து இயக்குநர் நாக் அஸ்வின் படம் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ப்ராஜெக்ட் கே

ப்ராஜெக்ட் கே

பல நூறு கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு ப்ராஜெக்ட் கே என தற்காலிக டைட்டில் வைத்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரபாஸ், தீபிகா படுகோன் இருவரும் படு பிசியாக இருந்து வந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திஷா பதானி ஆன்போர்ட்

திஷா பதானி ஆன்போர்ட்

எம்.எஸ். தோனி, மலங், ராதே உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள பாலிவுட்டின் கவர்ச்சி குயின் திஷா பதானி ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் அவர் ஆன்போர்ட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலைதளத்தில் #ProjectK என்கிற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பிகினி பேபி

பிகினி பேபி

பாலிவுட்டின் பிகினி பேபியாகவே வலம் வருகிறார் நடிகை திஷா பதானி. இன்ஸ்டாகிராமில் அவர் டூ பீஸ் அணிந்து வெளியிடும் ஹாட்டான புகைப்படங்கள் எல்லாமே சர்வதேச அளவில் ஹிட் அடித்து வருகின்றன. ஏற்கனவே தீபிகா படுகோன் இருக்கும் நிலையில், திஷா பதானியையும் இணைத்திருப்பதால் ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது கன்ஃபார்ம்.

Recommended Video

நடிப்பிற்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் சொன்ன சத்யராஜ் | Radhe Shyam press meet
கம்பேக் கொடுப்பாரா பிரபாஸ்

கம்பேக் கொடுப்பாரா பிரபாஸ்

பாகுபலி 2ம் பாகத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பல கோடி பட்ஜெட்டில் உருவான சலார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே போல சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார், பாலிவுட் படமான ஆதிபுருஷ் மற்றும் ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்கள் மூலம் மீண்டும் தனது பாக்ஸ் ஆபிஸ் ராஜாங்கத்தை நிரூபிப்பாரா பிரபாஸ் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X