twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாயிஷா முதல் திஷா பதானி வரை.. டிரெண்டாகும் ஜெனிபர் லோபஸின் சூப்பர் பவுல் டான்ஸ் சேலஞ்!

    |

    சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸின் #JLoSuperbowlChallenge என்ற ஹாஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

    Recommended Video

    Full Video: Quarantine Dance | Sayyeesha, Jhanvi Kapoor, Jwala Gutta, Mahima Nambiar

    கோலிவுட் நடிகை சாயிஷா முதல் பாலிவுட் நடிகை திஷா பதானி வரை நம்ம நாட்டிலும் இந்த நடன சவாலை ஏற்று மிரட்டி வருகின்றனர்.

    எந்திரன் படத்தில் வரும் ரஜினியை போல, எங்கே பார்த்தாலும், அதே நடிகை இருப்பது போன்ற பக்காவான மேஜிக் எடிட்டுடன் வெளியாகி வரும் இந்த நடன வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    கொரோனாவால் விமானங்கள் ரத்து.. அமெரிக்காவில் சிக்கிக் கொண்ட இளம் நடிகை.. மத்திய அரசு உதவ கோரிக்கை!கொரோனாவால் விமானங்கள் ரத்து.. அமெரிக்காவில் சிக்கிக் கொண்ட இளம் நடிகை.. மத்திய அரசு உதவ கோரிக்கை!

    வைரல்

    ஜெனிபர் லாரன்ஸ் டிக் டாக்கில் டிரெண்ட் செய்து இந்த #JLoSuperbowlChallenge-ஐ உலகம் முழுவதும் பல்லாயிரக்காணக்கான டிக் டாக் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் முயற்சி செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். எங்கே பார்த்தாலும், பல உருவங்களாக நடனமாடும் இவர்களை பார்த்து சிரிப்பதா, ரசிப்பதா என்ற எண்ணமும் தோன்றுகிறது.

    சாயிஷா

    கோலிவுட்டிலும் இந்த ஜெனிபர் லோபஸின் சூப்பர் பவுல் சேலஞ்சை நடிகை சாயிஷா அறிமுகப்படுத்தி உள்ளார். லாக் டவுன் நேரத்தில் நடிகர் ஆர்யாவுக்கு வித விதமான உணவுகளை சமைத்துப் போட்டுக் கொண்டிருந்த சாயிஷாவுக்கு, தனது நடனத் திறமையை மீண்டும் ஒரு முறை ரிவைண்ட் செய்ய இந்த சூப்பர் சேலஞ் உதவி செய்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

    திஷா பதானி

    பாலிவுட்டின் இளம் கவர்ச்சி கன்னியான நடிகை திஷா பதானி, தனது ஸ்டைலில் ஜெனிபர் லோபஸ் பாடல் அல்லாமல், பியோன்ஸ் பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார். வெள்ளை நிற டாப் மற்றும் ராணுவ உடை போன்ற ஷார்ட்ஸ் அணிந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் திஷா பதானி.

    மில்லியன் கணக்கில்

    மில்லியன் கணக்கில்

    சற்று முன் இந்த சவால் வீடியோவுக்கு நடனமாடிய திஷா பதானி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு டிரெண்டாக்கி உள்ளார். சுமார் 3 மணி நேரத்தில் 2 மில்லியன் ரசிகர்கள் திஷா பதானியின் இந்த சூப்பர் பவுல் சேலஞ் நடனத்தை கண்டு வியந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

    English summary
    At a time when every other diva in Bollywood is taking up the #JLoSuperbowlChallenge, Disha Patani begged to differ by channelling her inner Beyonce.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X