Disha Patani: அப்போ அது உண்மை தான் போல.. பிரபாஸ் பட செட்டில் இருந்து போட்டோ வெளியிட்ட திஷா பதானி!

ஹைதராபாத்: பிரபாஸின் பிரம்மாண்ட படமான ப்ராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த படத்தின் செட்டில் இருந்து நடிகை திஷா பதானி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது ப்ராஜெக்ட் கே திரைப்படம்.

கீர்த்தி சுரேஷை வைத்து நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் தான் தற்போது இந்த பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார்.

Disha Patani shares BTS photos at Prabhass Project K shooting spot

வில்லனாக கமல்: ஆளவந்தான் படத்தில் கமலுக்கு கமலே வில்லனாக நடித்து மிரட்டிய நிலையில், மீண்டும் வில்லனாக கமல் நடிக்கப் போவதாக தீயாக தகவல்கள் பரவி வருகின்றன.

பிரபாஸுக்கு வில்லனாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க உலக நாயகனுக்கு அதிகபட்சமாக 150 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக வெளியான தகவலால் கோலிவுட் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆட்டம் கண்டுள்ளது.

ராஜமெளலி முயற்சி: கட்டப்பா கதாபாத்திரத்திற்கே கமல்ஹாசனைத் தான் ராஜமெளலி முதலில் முயற்சித்துள்ளார். கடைசியில் கமல் நடிக்க மறுத்த நிலையில் தான் அந்த வாய்ப்பு சத்யராஜுக்கு போனதாக கூறுகின்றனர்.

மேலும், மகேஷ் பாபுவை வைத்த் ராஜமெளலி இயக்கப் போகும் படத்திற்கே கமலை வில்லனாக்கும் முயற்சியில் ராஜமெளலி ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென நாக் அஸ்வின் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திலேயே அதை சாதிக்கப் போவதாக கூறுகின்றனர்.

செட்டில் திஷா பதானி: சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வரும் திஷா பதானி பிரபாஸின் ப்ராஜெக்ட் படத்திலும் நடித்து வருகிறார். தீபிகா படுகோன் ஏற்கனவே லீடு ரோலில் நடித்து வரும் நிலையில், திஷா பதானியும் செகண்ட் ஹீரோயினா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Disha Patani shares BTS photos at Prabhass Project K shooting spot

இந்நிலையில், ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு காஸ்ட்யூம் உடுத்திக் கொண்டு ஆக்‌ஷன் காட்சியில் நடித்த போட்டோவை வெளியிட்டுள்ளார் திஷா பதானி.

அப்போ அது உண்மையா?: திஷா பதானி ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோ வெளியிட்டுள்ள நிலையில், நேற்று முதல் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த பிரபாஸ் படத்தில் கமல் வில்லனாக நடிக்கப் போகும் தகவல் உண்மை தானா? என்கிற கேள்வி ஸ்ட்ராங்காக எழுந்துள்ளது.

அதற்காகத்தான் உடனடியாக ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து BTS போட்டோக்களை திஷா பதானி ஷேர் செய்துள்ளாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X