மெர்சல்டா டோய்.. 80 கிலோ தூக்கி ஸ்குவாட் போட்ட திஷா பதானி.. காதலரின் ரியாக்ஷனை பாருங்க!

மும்பை: ஒர்க்கவுட் ஃப்ரீக்கான நடிகை திஷா பதானி, 80 கிலோ எடையை தூக்கி ஸ்குவாட் போட்ட வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

திஷா பதானியின் காதலரும் நடிகருமான டைகர் ஷெராஃப் அந்த வீடியோ பார்த்து கொடுத்த ரியாக்‌ஷனும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

மலங் படத்தில் பிகினியில் தெறிக்கவிட்ட திஷா பதானி, அடுத்ததாக சல்மான் கானின் ராதே படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

இளைஞர்களின் க்ரஷ்

இளைஞர்களின் க்ரஷ்

சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய திஷா பதானி கொடுக்கும் ஹாட் போஸுக்கு மயங்காத இளைஞர்களே இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செம செக்ஸியான இளம் பாலிவுட் நடிகையாக திஷா பதானி ரசிகர்கள் மனங்களை கொள்ளை அடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டுமின்றி இவர் நடிக்கும் படங்களிலும் தாராளம் காட்ட இவர் தவறியதே இல்லை.

ஜாக்கி சானுடன்

ஜாக்கி சானுடன்

தெலுங்கில் நடிகர் வருண் தேஜ் நடிப்பில் வெளியான லோஃபர் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான எம்.எஸ். தோனி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும், ஒரே அடியாக இவருக்கு ஜாக்கி சானுடன் குங்ஃபூ யோகா படத்தில் நடிக்கும் ஜாக்பாட்டும் அடித்தது.

80 கிலோவில் குவாட்

80 கிலோவில் குவாட்

வெறித்தனமான ஒர்க்கவுட் ஃப்ரீக்கான நடிகை திஷா பதானி, தற்போது 80 கிலோ எடையுடன் ஸ்குவாட் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பார்வையும் அவர் பக்கம் திரும்பி உள்ளன. இத்தனை கிலோ எடையை எப்படி அசால்ட்டா தூக்குகிறாரே என வாய் பிளக்கின்றனர்.

1 மில்லியன் லைக்ஸ்

1 மில்லியன் லைக்ஸ்

ராஜேந்தர் த்ரோல் எனும் ஜிம் டிரைனர் மேற்பார்வையில், 75 கிலோ எடையுடன் ரெப் போட்ட வீடியோவையும், 80 கிலோ எடையுடன் ஸ்குவாட் போட்ட வீடியோவையும் பதிவிட்டு, தனது ஃபிட்னஸை பகிரங்கமாக ரசிகர்கள் மத்தியில் திஷா பதானி பறைசாற்றியுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் 1.2 மில்லியன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அம்மாவும் மகனும்

அம்மாவும் மகனும்

பீஃபிக்ரா மியூசிக் வீடியோவில் இருவரும் இணைந்து நடித்த காலத்தில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை இதுவரை அவர்கள் மறுக்கவில்லை. இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த டைகர் ஷெராஃப் ஹார்ட்டின் எமோஜியை போட்டுள்ளார். மேலும், டைகர் ஷெராஃபின் அம்மா ஆயேஷ் ஷெராஃப் 'அமேசிங் திஷு' என பாராட்டி உள்ளார்.

ஏற்கனவே 163 கிலோ

ஏற்கனவே 163 கிலோ

லாக்டவுன் எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஜிம்மே கதியென கிடந்த நேரத்தில், 163 கிலோ எடையை தனது அழகிய கால்களால் புஷ் செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மிரட்டி இருந்தார் திஷா பதானி. 163 கிலோ எடையை 4 முறை புஷ் செய்து செத்தே போய்விட்டேன் என இவர் கொடுத்த கேப்ஷனும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X