புட்ட பொம்மா மெகா ஹிட்.. 'புஷ்பா'வில் அல்லு அர்ஜூனுடன் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா பிரபல ஹீரோயின்?

By

ஐதராபாத்: பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் பிரபல இந்தி ஹீரோயின் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே.. திஷா பட்டானி உடற்பயிற்சி - வீடியோ

தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.

பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரகனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

2 வது இடம்

2 வது இடம்

த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இதன் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாகி இருந்த நிலையில், புட்ட பொம்மா என்ற பாடல் மெகா ஹிட்டானது. யூ டியூப்பில் இந்த பாடல் சாதனை படைத்தது. இதன் நடன அமைப்பும் பரபரப்பாகக் கவனிக்கப்பட்டது.

தேவிஶ்ரீ பிரசாத்

தேவிஶ்ரீ பிரசாத்

இந்தப் படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனை படைத்தது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, இதில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் விலகி விட்டதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து கன்னட ஹீரோ தனஞ்செயா நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்காக, சித்தூர் ஸ்லாங் பேச நடிகை ராஷ்மிகா பயிற்சி எடுத்துவருகிறார்.

ஒரு பாடலுக்கு

ஒரு பாடலுக்கு

இந்நிலையில் பிரபல இந்தி ஹீரோயின் திஷா படானி, இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இவர் 'புட்ட பொம்மா பாடலுக்கு, எப்படி அப்படி டான்ஸ் ஆடுனிங்க, ரொம்ப ஆச்சர்யமா இருக்கு? என்று நேரடியாகவே அல்லு அர்ஜுனிடன் கேள்வி எழுப்பி இருந்தார், கடந்த சில நாட்களுக்கு முன். அதற்கு அல்லு அர்ஜுன், இசையும் நடனமும் எனக்குப் பிடிக்கும் என்பதால் ஆடினேன் என்று தெரிவித்திருந்தார்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

அப்போதே அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுவிடுவார் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். புரிஜெகநாத் இயக்கிய லோஃபர் என்ற தெலுங்கு படம் மூலம்தான் ஹீரோயினாக அறிமுகமானார் திஷா படானி. இதைத்தொடர்ந்து இந்திக்குச் சென்ற அவர், எம்.எஸ்.தோனி, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத் உட்பட சில படங்களில் நடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X