அனுமதி இல்லாமல் படம் எடுப்பதா? இயக்குனர் ராம் கோபால் வர்மா அலுவகத்தில் திஷா பெற்றோர் போராட்டம்!
ஐதராபாத்: 'திஷா என்கவுன்டர்' படத்தை வெளியிடக் கூடாது என்று கூறி, இயக்குனர் ராம் கோபால் வர்மா அலுவலகத்தில் திஷாவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்ச்சை இயக்குனர் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கியுள்ள பல படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி இருக்கின்றன.

பாலியல் வன்கொடுமை
சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரா என்ற இந்தி படத்தை எடுத்தார். இந்த படம் தமிழிலும் வெளியானது. இவர் உண்மை சம்பவங்களை வைத்து படம் இயக்கும் ராம் கோபால் வர்மா திஷா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, படம் எடுப்பதாக அறிவித்திருந்தார்.

என்கவுன்டர்
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவரான திஷா, கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன், சென்னகேசவலு ஆகியோரைக் கைது செய்தது போலீஸ். கடந்த டிசம்பர் மாதம் அவர்கள், திஷா கொல்லப்பட்ட இடத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

பெட்ரோல் ஊற்றி
இந்த சம்பவத்தை படமாக்க இருப்பதாகக் கூறிய ராம் கோபால் வர்மா, 'என் அடுத்த படத்தின் தலைப்பு திஷா. நிர்பயாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்துக்குப் பிறகு, திஷாவை, வன்கொடுமையாளர்கள் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். இந்தப் படம் திஷா கொலையாளிகள் திஷாவை ஏன் கொன்றார்கள் என்பதை பற்றி பேசும் என்று கூறியிருந்தார்.

ஆனந்த் சந்த்ரா
இதற்கு திஷாவின் குடும்பத்தினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். படமாக எடுக்கக் கூடாது என்று ராம் கோபால் வர்மாவுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்தப் படத்தை ராம் கோபால் தயாரித்து முடித்துவிட்டார். இதை ஆனந்த் சந்த்ரா இயக்கியுள்ளா. ஶ்ரீகாந்த் ஐயங்கார், சோனியா அகுலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

திஷா என்கவுன்டர்
இதன் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பானது. படத்துக்கு திஷா என்கவுன்டர் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும் தங்கள் தரப்பில் எதையும் கேட்கவில்லை என்றும் திஷாவின் பெற்றோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஜூப்ளி ஹில்ஸ்
அது நடந்து வருகிறது. இந்நிலையில், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் முன்பு, திஷாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தை வெளியிடக் கூடாது என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Click it and Unblock the Notifications











