ஏப்ரல் மாதம் வரை.. சுஷாந்த் உடன் தொடர்பில் இருந்த திஷா.. வெளியான வாட்ஸப் சாட் ஆதாரத்தால் அதிர்ச்சி

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை திஷா சலியான் தொடர்பில் இருந்துள்ள வாட்ஸப் சாட் ஆதாரம் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

Recommended Video

Disha Patani Bikini Photos Goes viral | calvin klein

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கும், திஷா சலியான் தற்கொலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என திஷாவின் தந்தை சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

மும்பை போலீசாரும் தொடர்ந்து இருவர் மரணத்திற்கும் தொடர்பில்லை என மறுத்து வருகின்றனர்.

ஒருவாரத்தில்

ஒருவாரத்தில்

ஜூன் 8ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான், தனது வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து போஸ்ட் போட்ட நடிகர் சுஷாந்த், ஒரே வாரத்தில் ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்பில்லை

தொடர்பில்லை

பாலிவுட்டையே உலுக்கிய இந்த இரு தற்கொலைக்கும் தொடர்பில்லை என மும்பை போலீசார் மற்றும் திஷா சலியானின் குடும்பத்தினர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்கொலை செய்வதற்கு முன்பாக திஷா மற்றும் சுஷாந்த் சிங் எந்தவொரு தற்கொலை கடிதமும் எழுதி வைக்காதது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

இதன் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் மற்றும் திஷா சலியான் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என பாலிவுட் ரசிகர்களும், சில பிரபலங்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண விசாரணையை சிபிஐ விசாரிக்க உள்ள நிலையில், திஷா சலியான் மரண வழக்கும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரே ஒரு முறை தான்

ஒரே ஒரு முறை தான்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை, தனது மகள் திஷா சலியான் ஒரே ஒரு முறை தான் சந்தித்து, ஒரு மணி நேரம் மட்டுமே பேசி உள்ளார் என சமிபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த மாதம் ஏப்ரல் வரை திஷா சலியான், சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் தொடர்பில் இருந்த வாட்ஸப் சாட் கசிந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பப்ஜி விளம்பரம்

பப்ஜி விளம்பரம்

சமையல் எண்ணெய் மற்றும் பப்ஜி விளையாட்டு புரொமோஷன்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை புக் செய்ய திஷா சலியான் வாட்ஸப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். மேலும், அதன் விவரங்களை திஷாவிடம் சுஷாந்த் கேட்டுத் தெரிந்து கொண்ட வாட்ஸப் சாட்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை உள்ளிட்ட விஷயங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X