தற்கொலை செய்துகொண்ட.. சுஷாந்த் சிங் மானேஜர் திஷா உடல் நிர்வாணமாக கிடந்ததா? போலீசார் விளக்கம்!

By

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான் உடல் நிர்வாணமாக இருந்ததா என்பது பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Recommended Video

163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே.. திஷா பட்டானி உடற்பயிற்சி - வீடியோ

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திஷா சாலியான்

திஷா சாலியான்

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்துக்கு முன் அதாவது ஜூன் 8 ஆம் தேதி அவரது மானேஜர் திஷா சாலியான் தற்கொலை செய்துகொண்டார். அவர் மும்பை மலாடு பகுதியில் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுவும் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். இரங்கல் தெரிவித்த அடுத்த வாரமே சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதால், அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்று பாலிவுட்டில் கூறப்பட்டது.

நிர்வாணமாக

நிர்வாணமாக

ஆனால், இரு தற்கொலைக்கும் சம்பந்தமே இல்லை என மும்பை போலீசார் மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், திஷா சலியான் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்த போது அவர் உடல் நிர்வாணமாக இருந்தது என்றும் அவர் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்ததாகவும் பரபரப்பு தகவல் பரவியது. திஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.

தவறான தகவல்

இந்த தகவல் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை மும்பை போலீசார் மறுத்துள்ளனர். திஷாவின் உடல் நிர்வாணமாக கண்டுபிடிக்கப் படவில்லை. அது தவறான தகவல் என்று மும்பை இணை போலீஸ் கமிஷனர் விஷால் தாகூர் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்றனர். அவரது பெற்றோர் முன்னிலையிலேயே உடல் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

முன்னதாக, திஷா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபின் கொல்லப்பட்டு வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார் என்று மும்பையில் சில அரசியல்வாதிகள் தெரிவித்து இருந்தனர். இதையும் திஷா சாலியானின் பெற்றோர் மறுத்துள்ளனர். அதோடு, திஷா கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்பட்ட தகவலையும் திஷாவின் தந்தை சதீஷ் மறுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X