டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்.. குட்டீஸ்க்கு செம்மையான டைம் பாஸ் !

சென்னை : இந்திய நிறுவனமான ஹாட் ஸ்டாருடன் டிஸ்னி நிறுவனமும் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கிறது. டிஸ்னி உலகளவில் பட அனிமேட்டட் படங்கள் மற்றும் ஆக்ஷ்ன் மற்றும் சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து இருக்கிறது. அந்த அனைத்து படங்களையும் நாம் இனி ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்கலாம்.

Recommended Video

மீண்டும் வருகிறது Lollu Sabha | Re-Telecast | Quarantine | LockDown

மார்ச் 29 ஐ.பி.எல் இந்தியாவில் ஒளிப்பரப்பாகும் நாளில் ஹாட்ஸ்டாருடன் டிஸ்னி அறிமுகமாக இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் முன்கூட்டியே ஒத்தி வைக்கபட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 3 நேற்று அதிகாரபூர்வமாக டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் இணைந்ததாக அறிவித்தது. இதற்கு முன் ஹாட்ஸ்டார் செயலியில் இருந்த லோகோ மாற்றப்பட்டு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்று மாற்றபட்டிருக்கிறது.

 Disney is officially partnering with Hot Star

இந்த ஊரடங்கு நேரத்தில் அதிகபடியாக மக்கள் தங்களின் வீட்டிலே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிகபடியாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பிரச்சனைகளும் கலாட்டாக்களும் வெகுவாக ஏற்பட்டு வருகிறது. உலகளவில் டிஸ்னி நிறுவனம் குழந்தைகளை டார்கெட் செய்து தான் தனது முக்கால்வாசி திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது.

இதனால் தற்போது ஹாட்ஸ்டாரை வாங்கினால் மட்டுமே போதும் பல குடும்பங்கள் நிம்மதியாக தங்களின் வீடுகளில் குழந்தைகளை உக்காரவைத்து விடலாம். என்பதை நன்கு புரிந்து வைத்து இருக்கிறது.

 Disney is officially partnering with Hot Star

இதுமட்டுமின்றி இந்த அதிகபடியான படங்களை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப் செய்து வைத்துள்ளது. இதனால் குழந்தைகள் அனைவரும் தங்குதடையின்றி படங்கள் அனைத்தையும் எளிதாக புரிந்து பார்களாம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அலாவுதீன், தி லயன் கிங், இன்ங்கிரிடீபல் மற்றும் தி ஜங்கில் புக் போன்ற பழைய படங்களையும் குழந்தைகள் பார்த்து மகிழலாம் மேலும் ஃப்ரோசோன் 2, டாய் ஸ்டோரி சீரிஸ் மற்றும் கோகோ போன்ற புதிய படங்களும் அவர்களுக்காக காத்திருக்கிறது.

 Disney is officially partnering with Hot Star

டிஸ்னி குழந்தைகளுக்கு மட்டுமான நிறுவனம் கிடையாது உலகம் முழுக்க தங்களின் கற்பனை நாயகர்களாக பல சூப்பர் ஹீரோக்களை தங்களின் மனதில் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். மார்வெல் சினிமேடிக் யூனிவர்ஸின் கீழ் வரக்கூடிய மிக முக்கியமான சூப்பர் ஹீரோக்கள் படத்தையும் டிஸ்னி நிறுவனம் வைத்துள்ளது. இதனால் இந்த கோரன்டைன் நேரத்தை மிக எளிதாக செலவிட ஹாட் ஸ்டார் பிளஸ் டிஸ்னி கட்டாயம் உதவும் என்று எதிர்பார்க்க படுகிறது.

 Disney is officially partnering with Hot Star

ஸ்டார் நிறுவனம் தனது இணைய சேவையை ஹாட் ஸ்டார் மூலம் செயல்படுத்தி வருகிறது. ஸ்டார் தொலைகாட்சிகளின் அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் நாம் ஹாட் ஸ்டாரில் பார்க்க முடியும். இதில் மேலும் டிஸ்னி இணைந்திருப்பது மிகப்பெரிய பொழுதுபோக்காக நமக்கெல்லாம் அமைந்துள்ளது .
டிஸ்னி இணைந்துள்ளதால் ஹாட் ஸ்டார் வி.ஐ.பியை வருடத்திற்கு 399ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். இதில் குழந்தைகளுக்கான டிஸ்னி படங்கள் இந்திய படங்கள் மற்றும் விளையாட்டு சம்மந்தபட்ட பல விஷயங்களையும் கண்டுகளிக்கலாம். மேலும் ஹாட் ஸ்டார் ப்ரீமியமில் சலுகையை ஹாட்ஸ்டார் கொடுத்துள்ளது அதில் வருடத்திற்கு 1499 மற்றும் மாதத்திற்கு 299 கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X